பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 காதலும்கல்யாணமும்

“எங்கே வந்தாய், அக்கா? உன்னை நான் கூப்பிடவில்லையே?’ என்றாள் பாமா, ஒன்றும் புரியாமல்.

“கூப்பிட்டால்தான் வர வேண்டுமா என்ன, போடி!’ என்று அவள் முதுகைத் தேய்த்து விட்டுவிட்டு, ‘ஆமாம், முதலில் நீ அவரை எங்கே சந்தித்தாய்?” என்று கேட்டாள், ராதா. -

‘'நான் எங்கே அவரைச் சந்தித்தேன், அவர்தான் என்னைச் சந்தித்தார்’ என்றாள் பாமா.

“அதைக் கேட்கவில்லை நான்; எந்த இடத்தில் எப்படிச் சந்தித்தீர்கள் என்று கேட்கிறேன்’

‘ஏன், ஆபீசில்தான்’

‘ஆபீசில்தான் என்றால் இருவரும் ஒரே இலாகாவிலா வேலை பார்க்கிறீர்கள்?”

“ஆமாம்’

அப்படியானால் சந்தேகமே இல்லை; இவர்களுடைய காதலுக்கு இதயக் கவர்ச்சிதான் வித்திட்டிருக்க வேண்டும்’ என்று தனக்குத் தானே நினைத்துக்கொண்டுத் திரும்பிய ராதாவுக்கு, அதற்குள் என்ன தோன்றிற்றோ என்னமோ, ‘ஏண்டி, ? ‘’ என்று மறுபடியும் குரல் கொடுத்துக்கொண்டே குளிக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

‘என்ன, அக்கா?’ என்றாள் பாமா. ‘அவர் உன்னைக் காதலிப்பது அவருடைய பெற்றோருக்குத் தெரியுமா?”

‘தெரியாது’

‘ஏன், சொல்லச் சொல்கிறதுதானே?”

‘ஆகட்டும், சொல்கிறேன்!”

“இங்கே சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, அங்கே போய் மறந்துவிடாதே’

‘இல்லை, மறக்கவில்லை'