பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. வீரத்துக்கு ஒரு சோதனை!

கிரிதல் விவகாரம் எதுவாயிருந்தாலும் மேல் நாடுகளில் அதைப்பற்றிப் பகிரங்கமாகவே விவாதிக்கிறார்கள்; பகிரங்கமாகவே தீர்வும் காண்கிறார்கள். அதற்குக் குறுக்கே பெண்ணைப் பெற்றவர்களோ, பிள்ளையைப் பெற்றவர்களோ நிற்பதில்லை; அவர்களைச் சுற்றியிருக்கும் சமூகமும் அதை அவமானத்துக்கு உரிய ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அவதிப்படுவதுமில்லை. இதனால் பல காதல்கள் அங்கு வெற்றி பெறுகின்றன; காதலர்களும் வெற்றி பெறுகிறார்கள், அத்துடன் , கல்யாணத்துக்கு முன்பே காதலன் காதலியைக் கைவிட்டுவிட்டு ஒடிப்போவதோ அங்கே குறைவு. அதைவிடக் குறைவு, காதலிக்காகக் காதலன் தற்கொலை செய்துகொள்வதும், காதலனுக்காக காதலி தற்கொலை செய்து கொள்வதும், இருவரும் சேர்ந்தாற்போல் தற்கொலை செய்துகொள்வதும், இந்தியாவைத் தவிர வேறு எங்கும் இல்லை என்றுகூடச் சொல்லிவிடலாம்.

இங்கேயோ நிலைமை அப்படி இல்லை. இலக்கியத்தில் காதல் என்றால் இதயம் குளிர வரவேற்கிறோம்; கலையில் காதல் என்றால் கண்குளிர வரவேற்கிறோம்; வாழ்க்கையில் காதல் என்றால் வரிந்து கட்டிக்கொண்டு வம்புக்கு நிற்கிறோம். இதனால் காதல் விவகாரம் எதுவாயிருந்தாலும் இங்கே அது ரகசியமாகவே வைக்கப்படுகிறது; ரகசியமாகவே தீர்வும் காணப்படுகிறது. அந்தத் தீர்வுகள் பெரும்பாதும் காதலுக்கு விரோதமாயிருக்கின்றன; காதலர்களுக்கும் விரோதமாயிருக் கின்றன. பெண்னைப் பெற்றவர்களுக்கு விரோதமாயிருக் கின்றன; பிள்ளையைப் பெற்றவர்களுக்கும் விரோதமா யிருக்கின்றன.அவர்களைச் சுற்றியிருக்கும் சமூகத்துக்கோ