பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கல்யாணமும்

1.கனவுக் கன்னி

அன்று சனிக்கிழமை. சனிக்கிழமை என்றால் சாதாரண சனிக்கிழமை அல்ல; அந்த மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை அது!

இரண்டாவது சனிக்கிழமையில் அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா?-ஒரு விசேஷமும் இல்லை, அரசாங்க அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு அன்று விடுமுறை என்பதைத் தவிர!

சனிக்கிழமையில் விசேஷம் ஒன்றும் இல்லா விட்டாலும், சனிக்கிழமை விடுமுறையில் மட்டும் ஒரு விசேஷம் இருக்கத்தான் இருந்தது.அதுதான் ஞாயிறு விடுமுறையும் அத்துடன் சேர்ந்து வருவது!

இந்த விசேஷம் மாதத்துக்கு ஒரு முறைதான் என்றாலும், இரண்டு நாள் விடுமுறையைச் சேர்ந்தாற்போல் அனுபவிக்கும் மகிழ்ச்சி பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு அடுத்தாற்போல் அரசாங்க அலுவலர்களுக்குத்தானே கிட்டுகிறது?

அத்தகைய மகிழ்ச்சியை அனுபவிக்கும் பாக்கியம் பெற்ற அரசாங்க அலுவலர்களில் ஒருவனான மோகன், அந்த மாதத்திய இரண்டு நாள் விடுமுறையை எப்படிக் கழிப்பது