பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 69

நிஜக்கல்யாணம் பண்ணிப் பார்க்கப் போகிறாராமே, நிஜக் கல்யாணம்!

அதற்கெல்லாம் இவர் தகுதியுடையவராயிருப்பாரா என்று நான் அப்போதே சந்தேகப்பட்டேன்-அந்தச் சந்தேகம் சரியென்றல்லவாத் தோன்றுகிறது, இப்போது?

எனக்கென்னமோ இவர் சொன்னதில் அன்றே நம்பிக்கையில்லைதான்!-'அவனுக்கு உன்மேல் ஒரு கண்’. இதை அவர் அந்த முரடனை அடித்து வீழ்த்துவதற்கு முன்னால் இவர் சொல்லியிருந்தால் நான் நம்பியிருப்பேன். ஏனெனில், கோழைகள் காதலிக்கிறார்கள்; ஆனால் காதலிக்கப்படுவதில்லை!” என்பது எனக்குத் தெரியும். ஆனால் வீரர்களோ?-அவர்கள் ஒரு நாளும் காதலிப்ப தில்லை; ஆனால் காதலிக்கப்படுகிறார்கள்

அத்தகைய வீரர்களில் ஒருவர் அவர்-அவராவது, என் மேல் ஒரு கண் வைப்பதாவது?

இதில் ஏதோ சூழ்ச்சி இருக்க வேண்டும். அந்தச் சூழ்ச்சி இன்னதென்று தெரியும் வரை இவருடன் நாம் கொஞ்சம் எச்சரிக்கையுடனேயே பழக வேண்டும்..

இந்தத் தீர்மானத்துடன் அவள் அவனை நெருங்கிய போது, ‘வா பாமா, வா! என்ன இருந்தாலும் நாம் எல்லோரும் ஒரே ஆபீசில் வேலை பார்ப்பவர்கள் அல்லவா? அவன் என்னமோ அன்று நடந்துவிட்ட அந்த அசம்பாவிதத்துக்காக என்னைக் கண்டதும் ஒதுங்கி ஒதுங்கித்தான் நடந்தான். நான்தான், அவள் அழகு உன்னை அப்படிச் செய்யச் சொன்னால் அதற்கு நீ என்னடா செய்வாய்? ஆசை எல்லோருக்கும் பொதுவானதுதானே? வாவா என்று அவன் தோளில் கையைப் போட்டுத் தள்ளிக்கொண்டு வந்தேன்; அதற்குள் நீ வந்துவிட்டாய்!” என்றான் அவன், வழக்கம் போல் அசடு வழிய.

‘உங்களுக்கு இருக்கும் பெருந்தன்மை எனக்கு இருக்காது என்று நீங்கள் ஏன் நினைக்கவேண்டும்?