பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 காதலும் கல்யாணமும்

என்னைக் கண்டதும் அவருடைய தோளின்மேல் இருந்த கையை நீங்கள் ஏன் எடுக்கவேண்டும்?’ என்றாள் அவள்.

அவ்வளவுதான்; ‘'என்னை மன்னித்துவிடு பாமா, உன்னைப் பற்றி நான் அப்படி நினைத்தது தப்புத்தான்’ என்று உடனே அவளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு விட்டான் அவன்-அவனைப் பெறுத்தவரை அதற்குத்தான் மதிப்பே கிடையாதே!

அன்று மாலை, இனி நம் காதலை எங்கே வளர்ப்பது? ஆபீசில் வளர்க்கலாமென்றால் அதற்குக் குறுக்கே பரந்தாமன் வந்து நிற்கிறார்; கடற்கரையில் வளர்க்கலாமென்றால் அதற்குக் குறுக்கே யாராவது ஒரு முரடன் வந்து நிற்கிறான்!. இந்த நிலையில் எஞ்சி நிற்பது சினிமா ஒன்றுதான்!-அங்கே போனால் மனம் விட்டுப் பேசவா முடிகிறது? கிசுகிசு'வென்று பேசினால் கூட, ‘ஸ், ஸ்’ என்று சீறுவார்கள், அங்கே வருபவர்கள் மகா ரசிகர்கள் மாதிரி நகரத்தை ஆளுகிறவர்களும், காதலர் பூங்கா, காதலர் பாதை’ என்று வெறும் போர்டுதான் அங்கங்கே போட்டு வைக்கிறார்களே தவிர, பாதுகாப்பு ஏதாவது செய்கிறார்களா, காதலர்களுக்கு? அன்று அவன் சொன்னதுபோல, நாம்தான் துணைக்குப் போலீசாரை அழைத்துக்கொண்டு போகவேண்டும் போலிருக்கிறது!” என்று எண்ணிக்கொண்டே மோகன் ஆபீசை விட்டு வெளியே வந்தபோது, ‘இனிமேல் நீங்கள் என்னைக் கடற்கரைக்கு அழைக்கவே மாட்டீர்கள், இல்லையா?” என்றாள் பாமா, அவனுக்குப் பின்னால் வந்துகொண்டே.

எப்படியிருக்கும் மோகனுக்கு? என்னதான் இருந் தாலும் ஒரு பெண்ணுக்காக, தான் பின் வாங்குவதாவது’ இப்படி நினைத்த அவன் தன்னைத் தானே ஒருவாறு சமாளித்துக்கொண்டு, ‘அப்படியொன்றும் இல்லையே? இப்போது கூட நீ விரும்பினால் நான் வரத் தயார்’ என்றான், “எங்கே அவள் வந்துவிடுவாளோ?’ என்ற அச்சத்துடன்