பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 காதலும்கல்யாணமும்

‘இப்படியெல்லாம் பேசினால் உன்னை நான் அடித்தாலும் அடித்துவிடுவேன்’

‘மிக்க மகிழ்ச்சி; பெண்கைளையாவது உங்களால் அடிக்க முடியும் என்று நீங்கள் நினைப்பதுபற்றி!”

அவ்வளவுதான்; ஆத்திரம் தாங்கவில்லை அவனுக்கு-'ஏ பாமா, என்னை நீ விரும்புகிறாயா? இல்லை, வெறுக்கிறாயா என்று கத்தினான்.

‘அந்தக் கேள்விக்கு இனி இடமில்லை; வாருங்கள், போவோம்’ என்றாள் அவள், போனாற் போகிறதென்று அத்துடன் விட்டுவிட்டு.

“எங்கே?’ என்றான் அவன். ‘என் வீட்டுக்கு’ என்றாள் அவள். ‘என்னை உங்கள் வீட்டுக்கு அழைக்கும் அளவுக்குக் கூட உனக்குத் துணிவிருக்கிறதா, என்ன?”

‘எனக்கு இல்லை; என் அக்காவுக்கு இருக்கிறது” ‘உன் அக்காவுக்கு இருக்கிறதா?” “ஆமாம்; அதற்கு வேண்டிய தைரியம்தான் உங்களுக்கு இருக்க வேண்டும். இருக்கிறதோ, இல்லையோ?” என்றாள் அவள், அவனை ஒரு தினுசாகப் பார்த்துக்கொண்டே

‘ஏன் இல்லை. இருக்கிறது. இருக்கிறது’ என்று அவன் தன் மார்பைத் தடவி விட்டுக்கொண்டான்; அவளும் அவனுடன் சேர்ந்து அவனுடைய மார்பைத் தடவிவிட்டு விட்டு, அவனுக்குப் பின்னால் ஏறி உட்கார்ந்தாள்.

“ஸ்கூட்டர் அவள் வீட்டை நோக்கி நகர்ந்தது. ஆம், அவனுக்கிருந்த தயக்கம் அதற்கும் இருந்தது!

இங்கே இப்படியென்றால், அங்கேயோ ஆரத்தி ஒன்றுதான் பாக்கி. அதைத் தவிர, தன் தங்கையின் எதிர்காலக் கணவனை வரவேற்பதற்காக எத்தனை ஏற்பாடுகள் செய்யவேண்டுமோ, அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தாள் ராதா.