பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 73

அவையனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த மீனாட்சி, ‘ஏன், ஆரத்தியையும்தான் கரைத்து வைத்து விடேன்!” என்றாள் சிரித்துக் கொண்டே.

‘இப்போது ஏன் அம்மா அது, கல்யாணத்துக்குப் பிறகு வைத்துக் கொள்ளலாமென்று நினைக்கிறேன்!” என்றாள் ராதா, அவள் சொன்னதை உண்மையாக எடுத்துக் கொண்டு! “அதுதான் சரி; ஆனால் இங்கே உள்ள தரைவிரிப்பைக் கொண்டு போய் அங்கே விரித்து, இங்கே உள்ள நாற்காலி களைக் கொண்டு போய் அங்கே போட்டு, அவனை நீ அங்கே வரவேற்பதைவிட இங்கேயே வரவேற்றிருக்கலாமே?”

‘அப்படித்தான் நினைத்தேன் நான்; ஐயா என்ன நினைப்பாரோ என்னமோ என்று...”

‘உனக்குத் தெரியாதா, அவனை வரவேற்பதற்காக அவர் அவனுக்கு முன்னாலேயே வந்து உட்கார்ந்திருக்கிறார்’

‘போம்மா, நீங்கள் பொய் சொல்கிறீர்கள்’ அதற்குள், ‘ஏன் ராதா, நான் வரக்கூடாதா?’ என்றார் அவர், மேலே இருந்தபடி அவளை எட்டிப் பார்த்து.

அவ்வளவுதான்; வெட்கமாகப் போய்விட்டது அவளுக்கு. ஒடிப் போய் அங்கே விரித்த விரிப்பை எடுத்துக் கொண்டு இங்கே வந்தாள் விரிக்க; மீனாட்சி அதைத் தடுத்து, ‘உனக்கென்ன, பைத்தியமா? எங்கே வரவேற்றால் என்ன, நாங்கள் அங்கே வந்துவிடுகிறோம்!’ என்றாள்.

“சரி” என்று ராதா திரும்பியபோது யாரோ ஒரு மாணவி வந்து, ‘அம்மா இருக்கிறார்களா?’ என்றுஅவளை விசாரித் தாள். ‘இருக்கிறார்கள்’ என்று அவள் சொல்வதற்குள் மீனாட்சியே அங்கு வந்து, ‘வாடி வா இன்று நாங்கள் இங்கே ஒரு காதல் ஜோடியை வரவேற்கப் போகிறோம்!’ என்று அவளை வரவேற்றபடி, தனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த தன் கணவரையும் தன்னுடைய கண்ணால் அவளுக்குக் காட்டினாள்.