பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 75

‘சனியன், பீடை என்று தன் மனத்துக்குள்ளேயே கருவிக்கொண்டு, ஐந்து ரூபாயை எடுத்து அவள் கையில் வைத்தான் அவன், ‘இது பரவாயில்லை, ஒரு ‘பகல் காட்சிக்காவது போய்விட்டு வரலாம்!” என்று அவள் அதை எடுத்து வைத்துக் கொண்டு, ‘ஏமாந்தாயா, இப்போது அப்பா இங்கே இல்லையாக்கும்?’ என்றாள் சிரித்துக் கொண்டே

‘எனக்கும் தெரியும், அது! இன்றில்லாவிட்டாலும் நாளைக்காவது அழுதுதானே தீரவேண்டும் என்று அழுதேனாக்கும்?’ என்றான் அவன்.

‘ஐயோ பாவம், அழாதே அண்ணா!’ என்று தன் இடையில் செருகியிருந்த கைக்குட்டையை எடுத்து அவனிடம் நீட்டினாள் அவள்.

‘நான் ஒன்றும் அழவில்லை; நீயே வைத்துக்கொள், உன் கைக்குட்டையை!’ என்று அவன் அதை அவளிடமே விட்டெறிந்துவிட்டுத் திரும்பியபோது, கையில் பிரசாதத்துடன் கோயிலிலிருந்து வந்து கொண்டிருந்த அவனுடைய அம்மா, ‘என்ன சங்கதி?” என்று விசாரித்தாள். அவன் அதற்கு என்ன சொல்வது என்று யோசிப்பதற்குள், ‘ஒன்றுமில்லை அம்மா! அண்ணா இல்லே, அண்ணா...’ என்று ஆரம்பித்தாள் அவள்.

“என்ன அண்ணாவுக்கு?’ என்று அம்மா கேட்டாள். ‘உத்தியோகத்தில் உயர்வு கிடைத்திருக்கிறது, அம்மா!’ என்றான் அவன், அதற்குள் அவளை முந்திக்கொண்டு.

அப்பொழுதும் அம்மா அவனை நம்பாமல், ‘உண்மை யாகவா?’ என்று கேட்டாள், அருணாவின் பக்கம் திரும்பி.

‘ஆமாம், அம்மா!’ என்றாள் அவள், தன் அண்ணாவைக் கடைக்கண்ணால் கவனித்துக்கொண்டே.

‘எல்லாம் அம்பாளின் கிருபை என்று தன் கையிலிருந்த பிரசாதத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு அவள் உள்ளே சென்றாள்; மோகன் பெருமூச்சு விட்டான்.