பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 காதலும் கல்யாணமும்

அத்துடன் அவனை விட்டுவிடவில்லை, அருணா; கூடத்தில் போட்டிருந்த சோபாவில் ஜம்மென்று அமர்ந்து, ‘எங்கே, இங்கே இருந்த பத்திரிகையைக் காணோம்?” என்றாள் அதிகாரத் தொனியில்.

‘அப்பாவின் அறையில் இருக்கும்’ என்றான் அவன், அடக்கமே உருவாக,

‘அதைச் சொல்லவா உன்னை நான் கேட்டேன்? போய் எடுத்துக்கொண்டு வா’ என்றாள் அவள், அதட்டும் குரலில். ஐந்து ரூபாய் வாங்கிக்கொண்ட பிறகுமா இந்த அநீதி’ என்று முணுமுணுத்துக்கொண்டே அவன் மாடிக்குப் போய் அதை எடுத்துக்கொண்டு வந்தான்.

அவள் அதை எடுத்துப் பிரித்துக்கொண்டே, ‘அந்த மின்விசிறியைப் போடு’ என்றாள்.

அவன் போட்டான். ‘அம்மாவிடம் போய்ச் சமையல் ஆகிவிட்டதா என்று கேள்!’ என்றாள் அவள்,

அவன் போய்க் கேட்டுவிட்டு வந்து, ‘இன்னும் கொஞ்சம் நேரமாகுமாம்’ என்றான்.

‘சரி உட்கார்!’ என்றாள் அவள். அவன் உட்கார்ந்தான். “எழுந்திரு’ என்றாள் அவள். அவன் எழுந்தான். ‘பத்திரிகையில் ஒன்றையும் காணோம்; ரேடியோவைத் திருப்பி வை’ என்றாள் அவள். அவன் திருப்பி வைத்தான். ‘'தேவலையே? நான் சொன்னபடியெல்லாம் கேட்கிறாயே, நீ” என்றாள் அவள்.

‘'வேறு வழி போயும் போயும் உன்னிடமல்லவா அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன், நான்? என்றான் அவன்.