பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 காதலும்கல்யாணமும்

என்பதைப் பற்றி அதற்கு முந்திய நாளே ஒரு முடிவுக்கு வந்திருந்தான். அதன்படி, காலை எழுந்தவுடன் காபி; காபிக்குப் பிறகு, போகிற வழிக்குப் புண்ணியம் தேடித்தரும் ரேடியோ ஒலிபரப்பாளர்களுக்கு வந்தனம் தெரிவித்து விட்டுப் பத்திரிகைகளில் கவனம் செலுத்துவது; அதற்குப் பிறகு வழக்கம்போல் ஒன்பது மணிக்குச் சாப்பாடு; சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு ‘சின்னத் தூக்கம்-வழக்கத்துக்கு விரோதமாகத்தான்

ஒரு மணிக்கு அலாரம் தன்னை எழுப்பாவிட்டாலும் ‘அம்மா’ எழுப்பிவிடுவாள், ‘டி.பன் சாப்பிட அவள் ‘டிப'னுக்கும் அன்று மட்டும் ‘வந்தனத்தைத் தெரிவித்துவிட்டு ஏதாவது ஒரு ‘நல்ல ஒட்டலுக்குப் போய்விட வேண்டியது, ‘நல்ல டிபன், சாப்பிட!-அது முடிந்ததும் பகல் காட்சி, ஆங்கிலப் படம்; மாலைக் காட்சி, இந்திப்படம்; இரவுக் காட்சி, தமிழ்ப் படம்-அதாவது, ‘தூக்கம் வந்தாலும் பரவாயில்லை என்ற தனிச்சலுகை’ தமிழ்ப் படத்துக்கு மட்டும்!

‘சனிக்கிழமை க்கு மட்டும் தயாரித்து வைத்திருந்த இந்தத் திட்டத்தை எந்தவிதமான இடையூறும் இல்லாமல் நிறைவேற்றிவிட்டு இரவு ஒரு மணிக்கு அவன் வீடு திரும்பியபோது, பாழாய் போன ‘ஸ்கூட்டர் போட்ட சத்தம் அவனைக் காட்டிக் கொடுத்துவிட்டது, அவன் அப்பா ஆபத்சகாயத்தினிடம். “ஏண்டா, மோகன் இந்த நேரத்தில் நீ எங்கே போய்விட்டு வருகிறாய்?” என்றார் அவர், மாடியில் இருந்த தம்முடைய அறையின் ஜன்னல் வழியாக அவனை எட்டிப் பார்த்து.

அப்பா சாதாரண அப்பாவாயிருந்தால், சரிதான், போங்காணும்’ என்று தற்காலப் புத்திர சிகாமணிகளைப் பின்பற்றி அவனும் சொல்லிவிட்டிருப்பான். ஆனால் முன்னாள் போலீஸ் அதிகாரியான அவரோ எப்படி வருகிறது, எங்கிருந்து வருகிறது என்று வீட்டில்