பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 காதலும் கல்யாணமும்

திருட்டுப் போன பொருட்கள் அவர் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டால்கூட, ‘யாரோ கொண்டுவந்து போட்டு விட்டான்? என்றுதானே உலகம் சொல்லும்?-அந்த உலகம் அவருக்குப் பாதுகாப்பு: அவர் திருடர்களுக்குப் பாதுகாப்பு

இந்தப் பாதுகாப்பைத் தவிர வேறு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் வளர்ந்து வந்த அந்தத் தொழிலுக்குப் போட்டியும் ஒரளவு இருக்கத்தான் இருந்தது. ஆனால், அந்தப் போட்டி அவரைப் பாதிக்கவில்லை-எப்படிப் பாதிக்கும்? ஒரு பக்கம் போட்டி இருந்தாலும், இன்னொரு பக்கம் அந்தப் போட்டியால் திருடர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பல்கிப் பெருகி வரும்போது?

இதனால் சமூகத்துக்குத் தீமையென்றாலும், சமூகம் யாருக்கு, எப்படிப் பணம் வருகிறது என்பதையா கவனிக்கிறது? எவனுக்காவது, எப்படியாவது பணம் வந்துவிட்டால் சரி, அவன் அதற்குப் பெரிய மனிதன் தானே? அத்தகைய பெரிய மனிதர்களில் ஒருவராகத்தான் ஆபத்சகாயமும் திகழ்ந்து வந்தார்-இது வழிப் பிரயாணத்தில் மட்டுமல்ல; வாழ்க்கைப் பிரயாணத்திலும் அவர் கண்ட குறுக்கு வழி

ஆனால், அந்த வழிக்காகத் தாம் பெரிய மனிதர் என்ற அந்தஸ்தையும் அவர் அடியோடு இழந்துவிடுவதில்லை; அப்படியே இழந்தாலும் இரவில் மட்டுமே ஓரளவு இழப்பார்-அதாவது, திருடனோடு திருடனாக அமர்ந்து, தொழிலைக் கண்ணுங் கருத்துமாகக் கவனிக்கும்போதுபகலிலோ பேசக்கூடாது; பெரிய மனிதர் பெரிய மனிதர்தான், திருடன் திருடன்தான்!

இதெல்லாம் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாதா என்றால் தெரியும்; ஆனால் எப்படி?-'ஏழை படும் பாடு’ என்ற கதையில் வரும் திருடனிடம் கருணை காட்டிய பாதிரியார் நமக்கு எப்படித் தெரிகிறாரோ, அப்படி; புத்தர்