பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 காதலும்கல்யாணமும்

‘படித்த பெண்ணான நீ கூடவா அப்படிக் கேட்கிறாய்? வருந்துகிறேன் அம்மா வருந்துகிறேன்! மற்றவர்களுக்குக் கருணை காட்ட இந்தப் பாழும் உலகத்தில் எத்தனையோ பேர் முன் வருவார்கள்; திருடனுக்குக் கருணை காட்டத்தான் ஒருவரும் முன்வர மாட்டார்கள் அம்மா, ஒருவரும் முன் வர மாட்டார்கள்’ என்றார் அவர், அதற்கும் அசைந்து கொடுக்காமல்.

‘அந்த ஒருவர் நீங்களாயிருப்பது என்னைப் புல்லரிக்கச் செய்கிறது, அப்பா’ என்றான் மோகன்-காதல் வள்ளல்” அல்லவா, கருணை வள்ளலின் அருமை அவனுக்குத்தானே தெரியும்?

13. அது என்னமோ, எனக்குத் தெரியாது!??

கிTதல் வள்ளல் தன் தங்கையிடம் அகப்பட்டுக் கொண்டு தவித்தான் என்றால், காதல் வள்ளியோ தன் தமக்கையிடம் அகப்பட்டுக்கொண்டு தவித்தாள். ஆம், பாமா என்ன சொல்லியும் அவள் கேட்கவில்லை; ‘அங்கிருந்து இவ்வளவு தூரம் வந்தவர், இங்கே வந்ததும் உன்னை விட்டுவிட்டுப் போய் விட்டாரென்றால், நீ ஏதாவது சொல்லித்தான் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால் அவர் ஏன் அப்படிப் போயிருக்கப் போகிறார்?’ என்றாள் அவள், பிடிவாதமாக.

“நான் ஒன்றும் சொல்லவேயில்லை, அக்கா அவர்தான் வந்ததும் வராததுமாக இருக்கும்போதே, ‘இன்று வேண்டாம்; இன்னொரு நாளைக்கு என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்’ என்றாள் இவள், பரிதாபமாக.

‘அதை அவர் அங்கேயே சொல்லியிருக்கலாமே?”