பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 காதலும்கல்யாணமும்

‘நாய் விற்றக் காசு குரைக்கவாப் போகிறது என்று அவர் நினைக்கிறார்!”

‘எல்லோரும் அப்படி நினைத்துவிட்டால் இந்த உலகம் என்னடா ஆவது?”

‘அதுதான் உருண்டை என்கிறார்களே சார், அதை யாரால் ஒரு நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்த முடியும்? அது பாட்டுக்கு உருண்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான்’

‘சரி, அந்தக் காதல் ஜோடி இங்கே எத்தனை நாட்கள் இருக்கப் போகிறதென்றாவது தெரியுமா, உனக்கு?”

‘தெரியாது சார், அநேகமாக இந்த மாதிரி ஜோடியெல்லாம் இங்கே ஒரு நாள் கூட முழுக்க இருப்பது கிடையாது. அதாவது...”

‘'வேண்டாம்; அந்தக் கர்மத்தை நீ என் காது கேட்கச் சொல்ல வேண்டாம்’ என்று துண்டை எடுத்துத் துடைத்துக் கொண்டே தன் அறைக்கு வந்தான் மணி.

சங்கர் அவனைத் தொடர்ந்து வந்து, ‘காபி, கீபி ஏதாவது வேண்டுமா, சார்?’ என்று கேட்டான்.

‘ஒன்றும் வேண்டாம்; இன்று நான் எங்கேயாவது போய் அஞ்ஞாத வாசம் செய்துவிட்டு வரலாமென்று இருக்கிறேன்’

‘ஏன், ஆபீசுக்குப் போகவில்லையா?” ‘அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறாய்? அவர்கள் போயும் போயும் இன்றல்லவா எனக்கு விடுமுறை விட்டிருக்கிறார்கள்?”

‘அப்படியானால் சோதனைதான் சார், உங்களுக்கு’ என்று சொல்லிக் கொண்டே சங்கர் திரும்பினான்.

‘இது என்ன சோதனை, வாழ்க்கையே எனக்குச் சோதனையாய்த்தான் இருக்கிறது!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்ட மணி, வெளியே போவதற்காகத்