பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 93

தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தபோது, ‘மாட்டேன்; கல்யாணத்துக்கு முன்னால் உங்களுடைய இச்சைக்கு நான் ஒரு நாளும் இணங்க மாட்டேன்’ என்ற பெண்ணின் குரல் அவன் காதில் விழுந்தது.

‘யார் இந்தப் பெண் இவள்தான் அடுத்த அறையில் புதிதாகக் குடியேறியிருப்பவளாயிருக்குமோ? அப்படி யிருந்தால் இவளுடைய பேச்சிலிருந்து இவள் வன்முறைக்கு ஆளாகியிருப்பதாகவல்லவாத் தோன்றுகிறது?

ஐயோ பாவம் எந்தக் கிராதகனை நம்பி இவள் இங்கே வந்து இப்படித் தவிக்கிறாளோ? இந்த நிலையில் இவளை விட்டு விட்டா அஞ்ஞாத வாசம் செய்யப் போவது?

மற்ற தர்மங்கள் எப்படியிருந்தாலும், ‘மனித தர்மம்’ என்று ஒன்று இருக்கிறதே? அந்தத் தர்மம் இந்த நாளில் சிலருக்கு இப்படிப்பட்ட காட்சிகளைக் காணும்போது கண்ணை மூடிக்கொள்வதாக இருக்கலாம்; இப்படிப்பட்ட அவலக்குரல்களைக் கேட்கும்போது காதைப் பொத்திக் கொள்வதாக இருக்கலாம்-தனக்கோ9-அந்தப் பக்குவ நிலை’ இன்னும் கிட்டவில்லையே?

இருக்க வேண்டியதுதான்; இந்தக் காதல் காட்சி"யின் முடிவு என்னவென்று தெரியும் வரை, தான் இங்கேயே இருக்க வேண்டியதுதான்!

முடியாத உதவியை யாரும் யாருக்கும் செய்ய வேண்டாம்; முடிந்த உதவியைக் கூடவா யாரும் யாருக்கும் செய்யக் கூடாது அதைக் கூடச் செய்யாத மனம், செய்ய விரும்பாத மனம், எப்படி மனித மனமாயிருக்க முடியும்?

இது என்னக் கேள்வி அப்படியும் சிலர் இந்த உலகத்தில் இருக்கத்தானே இருக்கிறார்கள்?

இருக்கட்டும். இருந்து, அவர்கள் அவர்களுக்காகவே வாழட்டும்; அவர்கள் அவர்களுக்காகவே சாகட்டும். தன்னைப் பொறுத்தவரை, தான் அப்படி வாழவும் வேண்டாம்; அப்படிச் சாகவும் வேண்டாம்!