பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 காதலும்கல்யாணமும்

மொழி எதுவாயிருந்தாலும் அதில் அர்த்தமில்லாத சொல் என்று ஏதாவது ஒன்று உண்டா? அதே மாதிரி மனித வாழ்க்கையிலும் ஏன் அர்த்தமில்லாத வாழ்க்கை என்று ஒன்றுகூட இல்லாமல் இருக்கக்கூடாது?

அப்படியிருந்தால் இந்த உலகம் எவ்வளவு அழகா யிருக்கும் கனவில் காணும் அந்த அழகான உலகத்தை நனவில் காண முடியாதா?

இப்படி நான் மட்டுமா நினைக்கிறேன்... இப்படி நான் மட்டுமா கேட்கிறேன்? இதற்கு முன் எத்தனையோ பேர் இப்படி நினைத்திருக்கிறார்கள்; இதற்கு முன் எத்தனையோ பேர் இப்படிக் கேட்டிருக்கிறார்கள்!

அவர்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள், என்ன ஆனார்கள் என்று கேட்டால், மண்ணோடு மண்னாக மறைந்துவிட்டார்கள் என்று சொல்பவர்கள் சுலபமாகச் சொல்லலாம். ஆனால், உண்மை அதுவல்ல; அவர்களுடைய உடல் மண்ணில் மறைந்தாலும், உள்ளம் ஒரு சிலருடைய சொல்லிலாவது, ஒரு சிலருடைய செயலிலாவது இன்று வரை இடம் பெற்றுத்தான் வருகிறது. இல்லாவிட்டால் இந்த உலகமாவது, இன்னும் உயிர் வாழ்வதாவது?

அத்தகையவர்களில் ஒருவனாக வாழ விரும்பும் நான், இப்படி ஒரு பெண் இங்கேத் தவிப்பதை அறிந்தபிறகு, எங்கேப் போவது, எப்படிப் போவது?

இருக்க வேண்டியதுதான்; இந்தக் காதல் காட்சி'யின் முடிவு என்னவென்று தெரியும் வரை, தான் இங்கேயே இருக்க வேண்டியதுதான்!

இந்தத் தீர்மானத்துக்கு வந்ததும், ‘சங்கர், சங்கர்’ என்று சர்வரை அழைத்தான் மணி.

‘என்ன சார், அஞ்ஞாத வாசம் கைவிடப்பட்டதா?’’ என்று கேட்டுக் கொண்டே வந்தான் அவன்.

“அது எப்படித் தெரிந்தது, உனக்கு?"