பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 95

‘உங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருப்பதைவிட எனக்கு அதிகமாகவே தெரியும், சார்!” என்றான் அவன்.

“ஆச்சரியமாயிருக்கிறதே?” ‘சரி, இப்போது சூடா ஒரு கப் காபி-அவ்வளவுதானே?” “ஆமாம்!” அவன் நடந்தான்; மணி கடைசியாகக் காலில் அணிந்த செருப்பைக் கழற்றி விட்ட இடத்திலேயே விட்டுவிட்டுக் கட்டிலின் மேல் உட்கார்ந்தான்.

‘ஏன், என்மேல் உனக்கு நம்பிக்கையில்லையா?” என்ற ஆணின் குரல் அடுத்தாற்போல் அவன் காதில் விழுந்தது.

மணி சிரித்தான்; சிரித்துவிட்டுத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்:

நம்பிக்கை-வாழ்க்கையின் ஆணி வேரையே அல்லவா அசைத்துப் பார்க்கிறான், அவன்? -எமகாதகப் பயலா யிருப்பான் போலிருக்கிறது

இருக்கலாம்-அவன்மேல் அவளுக்கு நம்பிக்கை இருக்கலாம்; அவள்மேல் அவனுக்கும் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் யாரை யார், எதற்கு நம்புவது என்ற விதிமுறை வேண்டாமா, வாழ்க்கைக்கு? நடைமுறை வேண்டாமா, வாழ்க்கைக்கு?

சாவது நிச்சயமென்றாலும் வாழாமல் இருந்து விடுவதில்லை யாரும்1-அத்தகைய வாழ்வுக்கு அடிப்படை, ஆதாரம் எல்லாம் நம்பிக்கைதானே? அந்த நம்பிக்கையை ஒருவர் மேல் ஒருவர் வைப்பதென்றால், அதிலும் ஒரு பெண் ஓர் ஆணின் மேல் வைப்பதென்றால், அவ்வளவு எளிதில் வைத்து விட முடியுமா, அதை?

அவனுடைய சிந்தனை முடியவில்லை; அதற்குள் காதலி சொன்னாள்:

‘நம்பிக்கை வேறு, எச்சரிக்கை வேறு: தயவு செய்து இரண்டையும் ஒன்றாக்கிக் குழப்பாதீர்கள்’ -