பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 காதலும் கல்யாணமும்

காதலன் கேட்டான்: ‘இப்போது நீ அந்த எச்சரிக்கைக்காகத்தான் என்னை விட்டு விலகி நிற்கிறாயா?”

“ஆம், விலகி மட்டும் நிற்கவில்லை; உண்மையான மனிதனை வெளியே பார்க்காதே; நாலு சுவர்களுக்கு நடுவே பார்!’ என்று யாரோ ஒர் அனுபவசாலி சொல்லி யிருக்கிறானே, அவன் சொன்ன மனிதனை நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டும் இருக்கிறேன்!”

‘அவ்வளவு மோசமாகவா நினைக்கிறாய், என்னைப் பற்றி , ‘

‘இப்படிக் கேட்க வெட்கமாயில்லை. உங்களுக்கு? இந்த ஒட்டல் அறைக்கே நீங்கள் என்னை மோசம் செய்துதானே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள்?”

‘இதில் என்ன மோசம் இருக்கிறது? எதிர்பாராத விதமாக மகாபலிபுரம் பஸ் தவறிவிட்டது. ஐயோ, இரவு எட்டு மணிக்கல்லவா நான் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி யிருக்கிறேன்? அதுவரை எங்கே தங்குவது?’ என்று நீ தவித்தாய். தங்குவதற்கா இடமில்லை? என்று நான் உன்னை இங்கே அழைத்துக்கொண்டு வந்தேன். அவ்வளவு தானே நடந்தது?”

‘இல்லை; அதற்கு மேலும் ஏதோ நடக்கப் பார்க்கிறதே, அதைத்தான் இப்போது நான் விரும்பவில்லை என்கிறேன்!” ‘இப்போது விரும்பவில்லையென்றால், அதற்கு இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் வேறு எப்போது வாய்க்கப் போகிறது நமக்கு?’

‘'வேண்டாம்; அதற்கு இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் வேறு எப்போதுமே நமக்கு வாய்க்க வேண்டாம்!”

காதலி இப்படிச் சொன்னாளோ இல்லையோ, ‘'சபாஷ்!’ என்று தன் தொடையில் தானே தட்டிக்கொண்டான் மணி. அதற்குள் காதலன் சொன்னான்: