பக்கம்:காதல் மனம்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலகுரு மகாத்மியம்

7

கேட்டான் சேகரன், இளங்கன்று பயமறியாதல்லவா?

"சேகர்! அது பெரிய விஷயம்; உனக்கு விளங்காது. இருந்தாலும் சுருக்கமாகச் சொல்லுகிறேன். குலகுரு என்பவர் ஒவ்வொரு குலம், அல்லது சாதிக் கும் தலைவரைப் போன்றவர். மனிதர்க்கு பாரமார்த் தின் போதனே களையளித்து, ஆச்சார அனுஷ்டானங்களைகநிர்ணயித்து, கடவுளின் அருளுக்குப் பாத்திர மாக்கும் ஞான சிரியர்-மகாத்மா. நல்லெழுத்துகள்- போதகர். அவரது கருணுகடாட்சத்தால் நமக்குப் பல காரியங்கள் சித்தியாகும்' என்ருர் பாலசுக் தாம். ஒரு தனிப்பெருமையும்,பக்தியும் பளிச்சிட்டன அவரது முகத்திலே,

சேகரன் இன்னும் என்னவோ கேட்க வாயெடுத்தான். அதற்குள் சமையல் அறையிலிருந்து தாயின் அழைப்புக்குரல் வந்தது. தொடர்ந்து பசியும் நினைவுக்கு வரவே, அவன் தந்தையின் மடியினின் றும் துள்ளிக் குதித்து உள்ளே ஓடி விட்டான்.

பாலசுந்தரம் எழுந்தார் வெற்றிப் புன்னகையுடன். செல்வமகன் சேகரனின் மாறுபட்ட மனத் தைத் தன் வழியிலே திருப்பி விட்டதாக நம்பினர்; மகிழ்ந்தார். அவரது கெஞ்சத்திலே மீண்டும் பழைய படி நினைவு அலைகள்.....

நாளைய தினம் புலிசை சகருக்கு வருகை தரும் குலகுருவைத் தகுந்த முறையில் வரவேற்க வேண் டும். காலமோ சாதகமாயில்லை, அவருக்கு ஆண்டு தோறும் செலுத்தவேண்டி காணிக்கை, வரிப்பணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/10&oldid=1411537" இருந்து மீள்விக்கப்பட்டது