பக்கம்:காதல் மனம்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சைக்காரி

51

என் கணவரின் வீடு ஏழடுக்கு மாளிகை. கிலத் தில் விரிப்பது ரத்தினக்கம்பளம், கதவுப்பிடிகள், தாழ்,குமிழ் போன்றவை வெள்ளியில்தான் சோபா, நாற்காலி, கட்டில் முதலியவைகள் தந்தக் கடைசல் கள். பணச் செருக்கின் ஆடம்பரம் பரிபூரணமாக அங்கே நிறைந்திருந்தது. எனக்கு மாமன்,மாமிசத் திகள் யாரும் கிடையாது. என் கனலர் தன்னிச்சை யாக விடப்பட்ட தனி மனிதர். அங்கே எவ்வளவு ஆடம்பரமும்,செல்வமும் இருந்ததோ அவ்வளவுக்கு உண்மை அன்புக்கும், ஒழுக்கத்திற்கும், மனிதாபி மானத்துக்கும் பெரும் பஞ்சமிருந்தது.

சில ஆண்டுகள் எலியும் பூனேயும்போல் அவரு டன் வாழ்ந்தேன். அவ்வளவும் துன்ப வாழ்வு என் முகத்திலே அழகு ஜொலித்துக் கொண்டிருக்தது. கண்ணே, மூக்கே என்று கொஞ்சினர். சோத மனக்கவலை உடலைப் பாதித்து, சிறிது அழகைக் குலைத்தது; அவ்வளவுதான். கான் கசக்தபோப் விட்டேன். அன்னியப் பெண்களே காடவாரம்பித் தார். பல புதிய சகாக்களுடன் குடிப் பழக்கமும் சேர்ந்துகொண்டது. நாளாக ஆக, நடத்தைகெட்ட பெண்களே பகிரங்கமாக வீட்டுக்கே அழைத் து வருவதும், சகாக்களுடன் கோலாகலமாகக் கொட்ட மடிப்பதம், என்னே அவர்களுக்கு அடிமையாக வேலை செய்யச் சொல் தும், செய்யாவிட்டால் உதைப்பதுமான கிலேக்கு வந்துவிட்டார். அவரது ஒற்றைக் கண்ணிலே, அப்பொழுது கான் ஒருபெண் கைத் தோன்றவில்லை. பெண் பேய் மதவெறியனுக் கும், குடி வெறியனுக்கும் வாழ்க்கையில் வரம்பில்லை என்பதை அப்பொழுதுதான் நான் அறிந்தேன் எண்ணுதன எண்ணிப்பதைத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/54&oldid=1252730" இருந்து மீள்விக்கப்பட்டது