உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தம்முண் மயங்கித் தடுமாறும் பிறர்குழுவிற் சும்மையுறச் சேர்ந்து வெறுஞ் சோம்பேறி யென நின்றேன் அம்மையெனக் காநரகம் யாதோவென் றஞ்சுகின்றேன் கம்மலியுங் காந்தமலைக் கந்தா அடைக்கலமே. 76. இன்றேனும் பாலு மெடுத்தபிடே கஞ்செய்து நின்றேனும் தியானத்தே நேர்ந்தேனும் நினக்கண்மை சென்றேனும் நில்லாத சீத்தையே னஞ்சுகின்றேன் குன்றாச்சீர்க் காந்தமலைக் கோவே அடைக்கலமே. 77. நாளையியற் றுவமென்றே நாளெல்லாம் போக்கிவிட்டேன் நீளவிடும் பாச நெகிழ்த்தகரத் தான்காலன் மூளவருங் காலாரே முன்னுறுவா ரெனநைந்தேன் காளமுகிற் காந்தமலைக் கண்ணே யடைக்கலமே. 78. குற்றம் பலசெய்தேன் கூறுடைய பல்பவமும் பெற்றும் பிறந்துழலப் பெற்றும் நினை மறக்க லுற்றும் பலதுயர்க ளுற்றும் வருந்துகின்றேன் நற்றவர்சூழ் காந்தமலை நாதா அடைக்கலமே. பாத கமலம் நினையாத பாவியேன் ஈதினியா னுய்கின்ற வேரார் வழியென்றே ஒதுபவ ரைக்காணே னுள்ளே துணுக்குற்றேன் கோதில்வளக் காந்தமலைக் குமரா அடைக்கலமே. 79. 80. மாலை மலர்ந்து மறுநாளிற் சாம்பிவிழும் சோலை மலர்த்தேனைத் துய்க்கக் கருதாதே ஞால மழிந்திடினும் நலிவிலின்பந் தந்தருளும் காலுடையான் காந்தமலை கண்டூதாய் கோத்தும்பீ. 81.