பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி பஞ்சி காலத்திலும்” என்று படிக்காசுப் புலவரைப் போல், போகிற போக்கில் பொதுப்படையாக ஓரிரு வரிகள் 'பாடிச் சென்றவர்கள் ஒரு சிலர் அகப்படலாம், ஆனால் ஐம்பது லட்சம் தமிழ் மக்களின் உயிர்களைக் குடித்த தாது வருஷப் பஞ்சத்தை, அதனால் விளைந்த கொடிய சமுதாயச் சீர்கேட்டை, அதில் மக்கள் பட்ட துன்ப துயரங்களை எத்தனை தமிழ்ப் புலவர்கள் தமது பாடல்களில் 2.27டிச் சென்றனர்? இந்தக் கேள்வியை நெஞ்சில் நிறுத்தி நிக் கொண்டு, தமிழ் இலக்கிய த்தைத் துருவிப் பார்த்தால், நமக்குக் கிட்டும் விவரங்கள் மிகவும் அற்பு சொற்ப , மானவையாகவே உள்ள, என்றாலும், தமிழ்ப் புலவர்கள் பலரும் செய்யாத ஒரு காவியத் தைப் புலமை அறிவே. இல்லாத பாமர மக்கள் : செய் திருந் தனர். இலக்கிய ஏடுகளிலும், தனிப்பாடல் திரட்டுக்களிலும், சில்லரைப் பிரபந்தங்களிலும் காணப்படாத : விவரங்கள் வாய் மொழி வழக்காக வழங்கி வந்துள்ள பல்வேறு... நாட்டுப் பாடல் கனில் இடம் பெற்றுள்ளன, மண்ணை நம்பி வாழ்ந்த மக்கள் தமது அனுபவத்தில் பிறந்த உணர்ச்சிகளுக்கு அருமையான உருவம் கொடுத் திருக் கிறார்கள். ஆம். அவர்களது வாய் பாடா விட்டாலும், வயிறு பாட வைத்து விட்டது. இவ்வாறு பஞ்தத் தின் கொடுமையால் அவதிப்பட்ட மக்கள் மத்தியில் தோன்றிய பாடல்கள் பலப்பல, உதா 8 வனமாக, மாசி மழை பேயாதோ? மழை வெள்ளம் சாயாதோ? ஏத்து மீன் ஏறாதோ? எங்கள் பஞ்சம் தீராதோ ? நித்தம் கவலைகளோ? நெடுநாளும் துன்பங்களோ ? பாரக் கவலைகளோ ? பல நாளும் தொல்லைகளோ ? ' கன்னங் கறுத்தமழை: காலூணிப் பெய்யு மழை இன்னம் கறுக்க வேணும் ! எங்கள் பஞ்சம் தீரவேணும் !