பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவித்துறை அந்தாதி 13 தம் கருத்தில் கொண்டால், அவரது துணிச்சலையும் மனிதாபி மான உணர்ச்சியின் வெளிப்பாட்டையும் நாம் நன்கு புரிந்து கொள்ளலாம், அது மட்டும் அல்ல. அவர் காலத்தில் வாழ்ந்த ஏனைய புலவர்களுக்கும் அவருக்கும். இருந்த ஒரு வேற்றுமை யையும் நாம் தெரிந்து கொள்ளலாம். அவரோ அரசாங்க ஜில்லா அதிகாரி; நீதிபதி, அந்தப் பதவியின் மூலம் நல்லதோர் ஊer தியத்தையும், அந்தஸ்தையும் பெற்று வாழ்ந்தவர்; அந்தக் காலத்தில் நிலவிய பஞ்சத்தினால் பாதிக்கப் பட, அ தவர். ஆனால் அவரது காலத்தில் எனைய புலவர்கள் பலரும் வறுமை வாய்ப் பட்டவர்கள்; பஞ்சத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள்; எந் நோமும் புரவலர்களை நாடி ஆதரவு தேடியவர்கள், எனவே அவர்கள் தான் மக்கள் பட்ட அவதிகளைக் குறித்துப் பெரிதும் பாடியிருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கெல்லாம் இல்லாத மனிதாபிமான உணர்ச்சியும் சமுதாய உணர்வும் அரசாங்க , உத்தியோகத்திலிருந்த வேதநாயகம் பிள்ளையிடம்தான் காணப் பட்டன என்பதே அந்த வேற்றுமையாகும். தனிப் பாடல்கள் என்று பார்த்தால் தாது வருஷப் பஞ்சம் பற்றிப் பாடியுள்ள தமிழ்ப் புலவர் இவர் ஒருவரே எனலாம் . எனவேதான் இவரைப் பற்றி இங்குக் குறிப்பிட்டோம், என்றா லும், பஞ்சத்தின் பல்வேறு தன்மைகளையும் நாம் புரிந்து கொள்ள உதவுகின்ற நூல்கள் பஞ்சலட்சணத் திருமுக விலாசமும், காந்திமதி அந்தாதியும் தான். இவ்விரண்டிலும் பஞ்சலட்சணம் தான் தலை சிறந்தது ; ஈடு இணையற்றது. காந்திமதி அந்தாதி அளவிலும் தரத்திலும் பஞ்சலட்சணத்தை விட மிகவும் தாழ்ந்த , மிகவும் சிறிய நூலேயாகும். என்றாலும் அதுவும் பஞ்சத்தின் தன்மைகளையும், அவற்றால் விளைந்த பரிதவிப்பையும் நன்றா கவே எடுத்துக் கூறுகின்றது. அழகிய சொக்கநாத பிள்ளை 'காந்திமதி அந்தாதியை இயற்றிய அழகிய சொக்க நாத பிள்ளை சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த புலவராலார். இவரது வாழ்க்கை வரலாறு பற்றி, இவரது சமகாலப் புலவரும், இவரை நன்கறிந்தவருமான. வெள்ள கால் ப. சுப்பிர மணிய: முதலியார் எழுதியுள் ள கட்டுரையின் மூலமும் {வித்துவான் அழகிய