பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி 17 அழகிய சொக்க நாத பிள்ளை சிலேடையாகப் பேசுவதில் வல்லவராதலால், அவரது சம்பளம் என்ன என்று கேட்பவர் களிடம், இந்தச் சிறு தொகையான பத்து ரூபாயை “மா-சம்பத்து' என்று சிரித்துக் கொண்டே சொல்வாராம். இதேபோல் அவரது நண்பர் ஒருவர் மற்றொருவரது பொடிமட்டையை எடுத்து ஒளித்து வைத்து, மட்டைக்குரியவர் அதனைத் தேடித் தவித்த காலத்தில், அந்த நண்பர் சிரிக்கக் கண்ட அழகிய சொக்க நாத பிள்ளை, சிரித்தவரை நோக்கி, பொடி வைத்துத்தானே தனக செய்ய வேண்டும்! என்று {பொற்கொல்லர்கள் செம்புப் பொடி வைத்து ஊ தி, நகைகள் செய்வதைக் கருத்தில் கொண்டு) சிலேடையாகக் கூறினாராம், திருநெல்வேலி நகரில் தெற்குப் புதுத் தெருவின் தென் சுர கில் மேல்கோடியில், கல்வியும் செல்வமும் நிரம்பப் பெற்ற கவிராச நெல்லையப்ப பிள்ளை என்பார் தமது மாளிகையில் வாழ்ந்து வந்தார். அந்த மாளிகைக்குப் பின்புறமுள்ள பூந்தோட் டத்தில் வாய்க்கால் கரையை ஒட்டி, ஒரு பூசை மட்டமும் மடைப் பள்ளியும், அதற்கு அருகே ஒரு சவுக்கையும் இருந்து வந்தன. அந்தச் சவுக்கை வள்ளல் முத்துசாமிப் பிள்ளை என்பார் நெடுங் காலம் வசித்து வந்த இடமாகவும், புலவர்கள் வந்து கூடும் இட மா கவும் இருந்தது என்று வெ. ப. சு. எழுதுகிறார் . வள்ளல் 8) த்துசாமிப் பிள்ளை கார்காத்த வேளாளர் மரபில் , வந்தவர்; அவர் திருநெல்வேலிக்கு வடக்கே சுமார் நான்கு மைல் தொலை வில் தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள ராஜவல்லி புரத்தைச் சேர்ந்தவர்; அவர் தெற்குப் புது த் தெருவில் குடி யிருந்து, தம்மைக் காண வரும் புலவர் களுக்கு வேண்டும் பொரு ளுதவி புரிந்து ஆதரித்து வந்தார். அவரைக் காண மதுரை. திருநெல்வேலி, ராமநாதபுரம் ஜில்லாக்களைச் சேர்ந்த புலவர்கள் வருவதுண்டு எனவும், வேம்பத்தூர் பிச்சுவையர், . கல் போது புன்னைவனைக் கவிராயர். முகவூர் .. கந்தசாமிக் கவிராயர், இவரது புதல்வரான எட்டயபுர் சமஸ்தான வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை , முகவூர் இராமசாமிக் கவிராயர், இவரது புதல் வர்களான அருணாசலக் கவிராயர், சுப்பிரமணியக் கவிராயர், சின்னிகுளம் அண்ணாமலை, செட்டியார், ஊற்று மலை சமஸ் தான வித்துவான்களான முத்துவீருப்புலவர் மற்றும் கந்தசாமிப் புலவர், திருநெல்வேலி முத்துப்புலவர் முதலியோரும் முத்துசாமிப்