பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி ஓன. தகவல்களின் மூலம் தெரிய வருகின்றது, இவரது தனிப் பாடல் களும், முத்துசாமிப் பிள்ளை மீது இவர் பாடிய பல பாடல் களும் பல்வேறு' ' 'தனிப்பாடல் திரட்டுக்களிலும் இடம் பெற் றுள்ளன. பொதுவாகச் சொன்னால், இவரது காலத்தில் வாழ்ந்த ஏனைய புலவர்கள் . பலலரயும் போலவே, இவரும் சிலேடை, மடக்குப் போன்ற சித்துவித்தைப் பாடல் களையும், சிருங்கார ரசம் (விரசமும் கூடத்தான் 'த மிகுந்த பாடல்களையுமே பெரிதும் பாடியிருக்கிறார், என்றாலும், தெய்வங்களின் மீது இவர் பாடி யுள்ள பிரபந்தங்கள் சிலவற்றில் அற்புதமான சொல்லாட்சியும் கவிதை நயமும் மிக்க பாடல்கள் பல காணப்படுகின்றன. இவர் பாடியுள்ள கோமதி அந்தாதியில் ஒரு பாட்டு : கேடாய் வரும் நமனைக் * கிட்ட வராதே ! தூரப் போடா!' என்றோட்டி, உன் பொற்கமலத் தாள் நிழற்கீழ் வாடா என அழைத்து வாழ்வித்தால், அம்ம.! உனைக் கூடாது என்று யார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே! 7 இந்தப் பாடலின் வடிவ அமைப்பையும் கவிச் சுவையையும், கோமதித் தாமோடு உள்ளங்!கலந்த உறவோடு பாடும் பாவத்தை யும், ரசிகமணி டி, கே, சி. அவர்கள் ரசித்து ரசித்துக் கூறுவதை நானும் கேட்டிருக்கிறேன், , மேலும் அவர் ' திருநெல்வேலியும் கவியும்' என்ற தி மது. கட்டுரையில் இந்தப் பாடலைக் குறிப்பிட்டு ஈ. பக்தியானது , தமிழுக்குள்ளே : வளைந்து - வளைந்து ஓடுவது எவ்வளவு அழகாய் இருக்கிறது. !' என்று வியந்தும் கூறியிருக் கிறார் -{இதய ஒலி - கட்டுரைத் தொகுப்பு): இதேபோல் அழகிய சொக்க நாத பிள்ளை இயற்றியுள்ள காந்திமதியம்மைப் பிள்ளைத் தமிழில் வஈரானைப் பருவம் வருகைப்பத்தூர் பகுதியில் ஓர் அருமையான பாடல் இடம் பெற் றுள்ளது... பாடல் வருமாறு :