பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திமதி வாராதிருந்தால் இனி நான் உன் வடிவேல் விழிக்கு மையெழுதேன் ; மதிவாணுதற்குத் திலகமிடேன் ; மணியால் இழைத்த பணிபுனையேன் ; பேராதரத்தி னொடு பழக்கம் பேசேன் ; சிறிதும் முகம் பாரேன் ; பிறங்கு முலைப்பால் இனிதுட்டேன் ;

  • பிரியமுடன் ஓக்கலையில் வைத்துத்

தேரார் வீதி வளம் காட்டேன் ; செய்ய கனிவாய் முத்தமிடேன் ; திகழு மணித் தொட்டிலிலேற்றித் திருக்கண் வளரச் சீராட்டேன். தாரார் இமவான் தட மார்பில் தவழும் குழந்தாய் ! வருகவே ! சாலிப் பதிவாழ் "காந்திமதித் தாயே ! வருக வருகவே ! பாடலில் 'பழக்கம் பேசுதல்' (குழந்தையிடம் அர்த்தமில்லாமல் பேசி மகிழ்தல்} 'ஒக்கலில் வைத்தல்' (இடுப்பில் வைத்தல்) ஆகிய திருநெல்வேலி - வழக்குச் சொற்கள் - அருமையாகப் பொருத்தி வந்துள்ளன. இத்தகைய பாடல்களைத் தவிர, இவர் பாடியுள்ள காதல் பிரபந்தங்கள், மற்றும் முத்துசாமிப்பிள்ளை பேரில் பாடிய பாடல்கள் மற்றும் தனிப் பாடல்கள், பத சாகித்தியங்கள் முதலியன பெரும்பாலும் சிருங்கார ரசத்திலேயே முங்கி முழுகித் தோய்ந்தவை என்றே சொல்லலாம். உதாரணமாக இவரது பத சாகித்தியத்திலிருந்து ஒரு பகுதி: தனித் திருக்கப் போமோடீ சகியே - நித்தம் எனைத் தழுவி நயந்தரும ரேசனையும் விட்டுத் - (தனித் ..