பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திமதி அன்ன விசாரம்

  • ஆன் னம் பிராணன்!' என்று கோஷிக்கிறது.' (லே தம், அந்த

அன்னத்துக்கு-உணவுக்குப் பஞ்சம் வந்துவிட்டால் மக்கள் பாடு பெரும் மரண வேதனையாகி விடுகிறது, அந்த வேதனையைக் கண்டு மண் கூட வாய் விட்டு அழுது விடும் போலிருக்கிறது. ஆனால் வானம் மட்டும் ஈரமேயற்ற கல் ெநஞ்சனைப்போல் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வழங்காமல் அடம் பிடிக்கிறது: மண்கூடவரய் விட்டு அழும் ஒரு சத்தம் அம்மா ! !மனசும் புண்கூடு என நொந்து போச்சுதம்மா! பட்ட புன்மை சொல்ல எண்கூட வில்லை; பிழைப்பது எவ்வாறு அடியேன் கள் அம்மா ! கண்கூடு வீங்கி உலகோர் படும் பஞ்ச காலத்திலே ? என்று புலவர் பாடுகிறார் . ஆனால் இத்தனை துயரத்துக்கும் காரணம் பஞ்சம் தான் பஞ்சத்துக்குக் காரணம் என்ன ? மழையில் லாதது மட்டும் தானா ? 'கஞ்சி குடிப்பதற்கிலார்;. அ. தன் காரணங்கள். இவையெனும். அறிவுமிலார்' என்று பாரதி பாடி னான். ஆனால் பாரதிக்கிருந்த அரசியல் ஞானமும் பொருளாதார அறிவும் அழகிய சொக்க நாதரிடம் இல்லை . எனவே அவரும் பாமர மக்களைப் போலவே பஞ்சத்தின் காரணம் தெரியாமல் விழிக்கிறார்: காலத்தைக் கஷ்டம் பெறாமல் நொந்தோம்; பங்க்யனை நொந்தோம்; சாலத்தை நீ செய்கின்றாயே என உன்றனையும்" நொந்தோம்; பாலத்தையுற்ற விழி உமையே ! இந்தப் பஞ்சம், வந்த மூலத்தை இன்னம் அறியேம்! திகைத்தனம் முற்றிலுமே!