பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திமதி இரந்து குடிப்பவர்க்கோ பஞ்சத்தால் குறைஎன்ன? முன்போல் நிரந்தரம் பிச்சை எடுத்துண்பார் ! செல்வர் என்னில் குறையோ ? தரம்தப்பி, எம்தரக்காரர்களே மெலிந்தார்! இனி உன் வரம் தந்து அளித்திட அம்மா! உனக்கு இது எம் மாத்திரமே! பரம்பரை ஆண் டி.யாக இருப்பவனுக்கு ஒன்றும் குறைவில்லை யாம். அவன் வழக்கம் போலவே பிச்சையெடுத்து உண்பானாம். அதேபோல் பரம்பரைப் பணக்காரர்களும் எந்தக் குறையு மின்றி இருப்பார்களாம், ஆனால் பஞ்சத்துக்கு ஆண்டியான அவரது தர த்தைச் சேர்ந்தவர் களே, அதாவது மத்திய தாக் காரர்களே மிகவும் மெலிந்து நலிந்து விட்டார்களாம், ஆம், சொப்பன சுராத சுகானந்த லகரியைப் பாடி வைத்த அழகிய சொக்க நாத பிள்ளை யின் சொப்பன வாழ்க்கையைப் பஞ்சத்தினால் ஏற்ப்பட்ட பிரத்தியட்ச வாழ்க்கை கலைத்து அவரை விழித்துப் பார்க்கச் செய்து விட்டது. என்றாலும் அந்த நிலையிலும் அவர் தமது வர்க்க பாசத்தை விடவில்லை, ஆனால் வாழ்க்கை மட்டும் அவரை விட்டு விடுமா? வள்ளல் முத்துசாமிப்பிள்ளை போன்ற செல்வந்தர்களை அண்டி வாழ்ந்து வந்தவர் தான் அவர். எனினும் அவரைப் போன்று பொருள் உள்ளவரைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்று வந்த புலவர் களையும் பஞ்சம் பாதித்து விட்டது. அவர் களது பஞ்சப்பாட்டைக் காது கொடுத்துக் கேட்கச் செல்வர்கள் தயாராக இல்லை. செல்வர்களுக்கோ அந்தப் பஞ்ச க ர லத்தில் கையிலுள்ள தானியத்தை எவ்வளவு அதிகமான லாபத்துக்கு விற்கலாம், எவனுடைய நிலத்தை" எழுதி : 'வாங்கலாம்' என்ப தல்லவா கவலை ? எனலே புலவர்களின் பஞ்சப்பாட்டைக் கேட்க அவர்களுக்குப் பொறுமையும் இல்லை; நேரமும் இல்லை. இதனால் புலவர்கள் பாடும் திண்டாட்டமாகிவிட்டது, கொண்டாடுவார் இந்தப் பஞ்சத்தை நெல் கட்டிக் கொண்டு விற்போர்; திண்டாடினோம்; புகல் வேறே இடமின்றிச் செல் வரைப் போய்க் கண்டாலும் பேசிலர்; வெம்பசியால் அவர் காதினிலே விண்டாலும் 'தள்ளு! தள்ளு!' என்பார்கள் சீறி வெடு வெடென்றே!