பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி 29 ஆனால் இப்படிச் சீறி . விழும் செல்வந்தர்களைப் புலவர்கள்' அண்டாமல் இருந்தார்களா? பசிக்கொடுமை அவர்களை அண்டா மலிருக்க விடவில்லை. ஆனால் அண்டியும் பயனில்லை; அரைக் காசுக்கும் வழியில்லை : வெடுவெடென்றே சொலும் வீணரைப் பாடி வியந்தலைந்து 'கொடு கொடு' என்றாலும் இங்கு , அம்மா, அரைச் சல்லி கெர்டார்! (சல்லி; பழைய நாணயம். 182 சல்லி கள் கொண்டது ஒரு ரூபாய்)., இவ்வாறு மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த படிப்பாளிகளும் புலவர்களும் ஆதரவின்றித் திண்டாடினார்கள். அழகிய சொக்க நாத பிள்ளை மட்டும் இதற்கு எந்த அளவுக்கு விதி விலக்காக இருந்திருக்க முடியும் ? இதனால் அவருக்குப் பணம் படைத்த செல்வர்கள் மீது பொறாமை ஏற்படுகிறது . பணக் காரர்களுக்கென்ன ? நிவம், கரைகள் ஏராளம். குனிந்து நிமிராமல் 'விவசாயி' என்ற பெட்ரோடு, ஏராளமான திலங்களில் கூலியாட்களைக் கொண்டு பயிரிடச் செய்யலாம். பயிர் செய்து வினை ந்த நெல்லைச் சேமித்தும் வைக்கலாம். உடம்பு கொழுத் துப் புடைக்கும்படி உண்டு களிக்கலாம், உண்டது போக மீதமுள்ள நெல்லைக் கொள்ளை லாபத்துக்கு விற்கலாம்; விற்று முதலான வணத்தில் இல்லக் கிழத் திக்கும் காதற் கிழத்தியருக்கும் நகைகள் செய்து பூட்டலாம்; கொஞ்சலாம்; குலாவலாம். புலவரது பொறாமையுணர்ச் சி-- சொல்லப் போனால் வயிற்றுப் பசியினாலும் வறுமையினாலும் எழுந்த தர்மாவேசக் குரல் -இவ்வாறு எழுந்து ஒலிக்கிறது; செய்கள் உள்ளோர்கள் பயிரிடுவார்; - நெல்லைச் சேர்த்து வைப்பார்; மெய் கொழுக்கும்படி உண்டிடுவார்; நெல் மிகுந் ததை வி லைகட்கு விற்று, வருடம் தப்பாமல் நகைகள் செய்வார்! கொய் கமழ் பூங்குழலாய்! பஞ்சத்தால் குறை என்ன் அவர்கட்கே ?