பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திமதி. என்றென்றைக்கும் துன்பங்களைத் துடைத்தெறியும் படைக் கலமாக விளங்கும் அம்பிகையின் பாதங்களை வாங்கும் புலவர், எதர் த்த வாழ்க்கையின் உண்மையான படைக்கலத்தையும் மறக்கவில்லை. பணம்--சர்வ சக்தி படைத்த படைக்கலமல்லவா அது ? வயிற்றுப் பசிக்கு உதவ வேண்டிய பொருள்கள் கடைக்கு அலங்காரமாக வீற்றிக்கும் காட்சியை உடைத்தெறிய வேண் உாமா? அதற்குப் பணம் என்ற படைக்கலம் அல்லவா தேவை ? ஆனால் அந்தப் பணம் எங்கிருந்து கிட்டும் ? உழைக்க உடலிருந் தும் பிழைக்க வழியில்லாவிட்டால் பணத்தை எப்படிப் பெறுவது ? ஃபஞ்சத்தில் சிக்கிய மக்கள் என்ன செய் தார்கள் ? பணம், பணம்! பணத்தைப் பணமுள்ளவர்களிடமிருந்துதான் பெற முடியும், அதனை உழைத்ததற்கான கூலியாகப் பெற வழியில்லையென் நீரால் கடனாகத் தானே பெற முடியும். எனவே மக்கள் கடன் கொடுப்பவர்களைத் தேடி ஓடுகிறார்கள். ஆனால் கடன் கொடுப் பவர்கள் அவ்வளவு லகுவில் மசிந்து விடுவார்களா? அவர்களுக்குக் கொடுத்த கடன் திரும்ப, வர வேண்டுமே என்ற கவலை; அ ைத விட, அந்தக் கடன் அசலும் வட்டியுமாக வந்து சேர வேண்டுமே என்ற ஆசை. இந்த ஆசையும் கவலையும் அவர்கள் மனத்தைக் கல்லாக்கி விடுகிறது, எனவே அவர்கள் தம்மிடம் உதவி நாடி வருபவரை இழிவு படுத்துகிறார்கள். நீந்தரும் பஞ்சத்தினால் கயவோரை நெருங்கில், 4.மாந்து இழிவாய் மதிக்கின்றார்; பிறர்தம் வருத் தங்களை ஆய்ந்து உணரார்; இவர் ஏன் பிறந்தார் இந்த அற்பர்கட்கும் காந்திமதி டிம்மா !எல்லாம் உன்னால் வந்த கட்டு மெட்டே இவ்வாறு கடன் தர மறுப்பவர் களை “ஏன் பிறந்தார்கள் இந்த அற்பர்கள் ? என்று வசை பாடித் தரற்று கிறார் புலவர். கடனுக்குப் போனால் இது மட்டும் தானா தொ 50 லை ? வாடிக்கை