பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ந்திமதி // ஆண்டாண்டு தோறும் இப்பஞ்சத்தினால் தொலையாக் கவலை பூன்.டால் எளியவர்க்கு எவ்வாறு இந்நாள் பிழைப் புக்கு இடமே ? தூண்டா மணி விளக்கே ! பலவாறு எம்மைத் துன்பம் செய்ய வேண்டாம்; இவ்வளவு போதும் அம்மா செய்த ' வெவ்வினைக்கே ! பாவம் ஆண்டாண்டு தோறும் தோன்றும் பஞ்சங்களுக்கெல் லாம் மக்கள் செய்த கெடும். பாவம் தான் காரணமென்றும், அதன். காரண மாகத் தெய்வமே அவர்களை மாறி மாறித் துன் புறுத்துவதாகவும் புலவர் கூறுகிறார். ஆனால் உண்மையான பாவிகள் யார் என்பதை அவர் உ ர வில்லை. அன்னியராட்சி யின் சுரண்டலும், அலட்சிய மனப்பான்மையும், மக்களை முன் னேற விடா மல் தடுத்து, அவர்களை என் றென்றும் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் ஆழ்த்தி வைக்க முனைந்த ராஜ தந்தி ? மும் தான் காரணங்கள் என்பதை அவர் உணரவில்லை, என்றாலும் பஞ்சம் தீர வேண்டும் என்று அவர் விருப்பப்பட்டார் நாடு செழித்தால்தான் அது நீங்கும் என்பதையும் அவர் உணர்ந்தார். எனவே நாடு செழிக்க நல்ல மழை பொழிய வேண்டும். மழை பொழிவதற்கு அம்பிகையின் அருள் வேண்டும் என்று அவர் கருதினார்; அவளது அருளை நாடினார். மயில் விளையாடும்படி மேகம் சூழ்ந்து , மழை விழுந்தால் வெயில் விழுமோ இப்படியே ? அப்போ நெல் விழும்; செயில் விடும் வித்தும் விளைவாய், இப் பஞ்சத்தினை விழுங்கும் அயில் விழிக் காந்திமதியே கு றை என்ன அடிமை கட்கே ஆம் மழை விழுந்தால் நெல் விலையும் விழும். அப்போது, செய் நிலங்களில் விழுகின்ற வித்தும் விம்மி விளைந்து பலன் தந்து பஞ்சத்தைப் போக்கும், எனவே நாடு செழித்தால் தான், விவசாயம் பெருகினால் தான் பஞ்சம் தொலையும் என்று உணர் கிறார் புலவர்,