பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி 38 அந்தாதியை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு கார ணமும் புரிந்து விடும். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்களின் வாழ்க்கையைத் தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் புரியாத புதிர் அல்ல. அந்த நூற்றாண்டுப் புலவர்கள் பலரும் தமது நூல்களில் எளிமையையும், இனிமையையும், புதுமையையும், அருமையான சொல்லாட்சியையும் புகுத்தத்தான் செய்தார்கள். எனினும் அவர் களிற் பெரும்பாலோர் தமது கும்பிக் கொதிப்பையும் குடும்ப வாழ்க்கையையும் கவனித்துக் கொள்வதற்காக, ஜமீன் தார்களையும் செல்வந்தர்களையும் அண்டிப் பிழைத்து வந்தனர். இதனால் அவர்கள் மக்களிட மிருந்து விலகியே நின்றனர். அவர்கள் தாம் அண்டிப் பிழைத்து வந்த ஆதரவாளர்களைப் புகழ்ந்து பாடுவதிலேயே காலத்தைக் கழித்தனர். அந்தச் சீமான்களின் சிற்றின் வேட்கையையும் நப்பாசைகளையும் திருப்திப்படுத்தும் விதத்தில், அவர்கள்மீது காதல், தூது, மடல், உலா போன்ற பிரபந் தங்களையே பா எடிச் சென்றார்கள். இவ்வாறு மேலிடத்துச் சீமான் களை ஆண்டிப் பிழைத்து வந்த அந்தப் புலவர்கள் கீழிடத்திலிருந்த மக்களை வாட்டி , வதைத்து வந்த பஞ்சத் ைதப் பாட முன்வரவில்லை; துணியவில்லை. எனவே தான் அந்தக் காலத்தில் புலவர் களின் பஞ்சப் பாட்டுக்குச் குறைச்சலில்லை நேர த வி ; பஞ்சத்தைப் பற்றிய பாட்டுக்களுக்குப் பஞ்சமாகவே போய் விட்டது! அழகிய சொக்க நாத பிள்ளையும் மேலே குறிப்பிட்ட புலவர்க ளிலிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டவர் அல்லர்தான், அவரும் தமது கவி பாடும் திறமையை யெல்லாம் 'காயென்று எடுத்து இலை' என்று முடிப்பதற்கும், 'நேசியல் என்று எடுத்து வாசியல்' என்று முடிப்பதற்குமான சில்லறைச் சg toர்த்தியத் துக்குத்தான் தமது செய்யுள் இயற்றும் திறனைப் பெரிதும் பலி பிட்டார். அதேபோல் ஐந்து 'சன்' வரப் பாடுவது. அடை மொழியின்றியே பாடுவது, பலகாரங்களின் பெயர் வரப்பாடுவது, சிரங்குக்கும் குா ங்குக்கும், சிலேடை பாடுவது என்பதோடு நில்லாமல் பெண் உறுப்புக்கும் வேறு பல பொருள்களுக்கும் சிலேடையாக உவ கித்துப் பாடுவது, அடிமடக்கு வரப் பாடுவது, நடுவெழுத்தலங்கலாம் வரப் பாடுவது முதலிய செப்படி வித்தை களிலும் சிந்) தயைச் செலவிட்டுக் காலத்தைப் போக்கியவர் தா 6ம் மேலும் அவர் தம்மை ஆ தரித்து வந்த வன் வால் முத்து