பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி தாதுவருஷமும் தமிழ்நாடும் இந்த நூற்றாண்டில் நிலவிய வங்காளப் பஞ்சம் பற்றி முன்னர் குறிப்பிட்டோம். வங்கப் பஞ்சத்தில் இறந்தவர்களின் தொகை ஐம்பது லட்சம், சென்ற நூற்றாண்டில், தமிழ்நாட்டில் நிலவிய, ரமேஷ் சந்திர த த் குறிப்பிட்டுள்ள தாது வருஷப் பஞ்சத் தில் மடிந் தவர்களின் தொகையும் ஐம்பது லட்சம் தான். இவ்வாறு வங்கப் பஞ்சத்துக்கு நிகரான இந்தக் கோரமான, கொடிய பஞ்சம் சென்ற நூற்றாண்டின் கடைக்காலப் பகுதியில், 1876ஆம் ஆண்டுக் குச் சரியான். தமிழ் ஆண்டு தாதுவில் தமிழ் நாட்டில் தலைதூக்கிப் பல ஆண்டுக்காலம் நிலவி மக்களைப் பலி கொண்டது. இந்தியா வில் நிகழ்ந்த பஞ்சங்களைப்பற்றி அறிக்கை தருவதற்கு அன்றைde ஆங்கிலேயே அரசாங்கம் நிறுவிய பஞ்சக்., கமிஷன் அறிக்கை களிலிருந்து, கென்னை மாகாணத்தைப் பாதித்த பின் வரும் பஞ்சங்களைப் பற்றிய விவரங்கள் கிட்டுகின்றன; -1876-78ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாணத்தின் இருபத்தியெ என்று ஜில்லாக்களில், பெல்லா ரீர், கர்நால், நெல்லூர், கடப்பை, செங்கல்பட்டு, சேலம், கோயம்புத்தூர் ர் ஆகிய ஜில்லாக்கள் நெடுங்காலத்துக்கு உண்மையிலேயே கடுமையான பஞ்ச த்தால் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட ஏwைய ஜில்லாக்கள் மதுரையும் திருநெல்வேலியும் ஆகும். -1884ஆம் ஆண்டு : மதுரை, கோயம்புத்தூர், கடப்பை ஜில்லாக்களில் கடுமையான உணவுப் பற்றாக்குறை... -1890-92ஆம் ஆண்டுகள் : சென்னை மாகாணம் பஞ்சம், சென்னை மாகாணம் முழுவதிலும் ஈராண்டுகளுக்கும்' மேலாக், விவசாயம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயிற்று...... இந்த விவரங்களிலிருந்து 1876 ஆம் ஆண்டு தொடங்கிய பஞ்சம் பத்துப் பதினைந்து ஆண்டுகள் வரையிலும்கூட நீடித் திருந்தது என்று நாம் தெரிந்து கொள்கிறோம். எனவே தான் தாது வருஷத்தில் தொடங் கிய பஞ்சம், வங்கம். பஞ்சத்தைப் போலவே தமிழ் நாட்டு மக்களின் நினைவில் நெடுங்காலம் வடுப் பாய்ந்து பதிந்து போயிருந்தது. இந்தப் பஞ்சத்தை அனுபவிக்க தேர்ந்த நமது முதியவர்கள் பலரும், இந்தப் பஞ்சத்தைப் பற்றிக்