பக்கம்:காந்தியடிகளும் ஆங்கிலமும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{காந்தியடிகளும் ஆங்கிலமும்}}}

25


யமைச்சர் சி. சுப்பிரமணியம். 'நாகரி லிபியை ஏற்பத னால், தமிழ் லிபியைக் கைவிடத் தேவையில்லை. இரண்டு லிபிகளையும் கையாளலாம் என்றார் பிரதமர் நேரு. இது உண்மை என்றால், நாகரிக்கு 'பொது லிபி' என்று பெயர் வைப்பானேன்? 'பயிற்சி லிபி' என்று சொல்லலாமே! அதனை நடைமுறைக்குக் கொண்டுவரும் பொறுப்பை அரசினர் ஏற்காமல், சாகித்திய அகாடமியிடம் விடலாமே! பிறமொழி கற்கும் கருவியே! இந்த லிபிப் பிரச்சனையில் காந்தியடிகள் கருத் தென்ன? இதோ, அவரே கூறக் கேட்போம்: "நான் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத் திலேயே சமஸ்கிருதத்திலிருந்து வந்த மொழி கள் யாவற்றையும் தேவநாகரி லிபியைக் கொண்டே எழுதுவது நல்லதென்ற முடிவிற்கு வந்தேன். திராவிட மொழிகளையுங்கூட, தேவ நாகரி லிபியின் மூலமாகவே எளிதாகக் கற்றுக் கொண்டு விடலாம் என்பது என் நம்பிக்கை. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய வற்றை அந்தந்த மொழிக்குரிய லிபியைக் கொண்டே நான் சில காலம் படித்து வந்தேன். லிபிகள் நான்கையும் தனித்தனியே கற்பது எனக்கு மிகவும் சிரமத்தைத் தந்தது. நான்கு மொழிகளுக்கும் லிபி ஒன்றாயிருந்திருக்குமானால், எவ்வளவோ குறுகிய காலத்திற்குள் அவற்றை நான் படித்திருக்க முடியும். இந்த மொழிகளைப் படிக்க என்னைப்போல் ஆவலோடிருக்கிறவர் களுக்கு, லிபியினால் ஏற்படுகிற கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. தென்னிந்தியாவில் இப்போது