பக்கம்:காந்தியடிகளும் ஆங்கிலமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியடிகளும் ஆங்கிலமும் லிபிப் பிரச்சனையில் காந்தியடிகளின் கருத்து வழி நடக்கவில்லை மேலிடத்துக் காங்கிரஸ் தலைவர்கள். காந்தி யடிகள், பொது மொழியாகிய இந்தியை நாகரி-உருது ஆகிய இரண்டு லிபிகளிலும் எழுதலாமென்றும், 'இந்தி' 'இந்துஸ்தானி' ஆகிய இரண்டு பெயர்களாலும் பொது மொழியை அழைக்கலாமென்றும் கூறினார். பாகிஸ்தான் பிரிந்து போன பின்னரும் இந்தக் கருத்தை வலியுறுத்தி வந்தார். ஆனால், காங்கிரஸ் மேலிடம், "நாகரி லிபியில் எழுதப்படும் இந்தி தான் இந்தியாவின் பொது மொழி என்று அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே பொறித்து விட்டது. இது, இந்தி வெறியா? தேசிய ஒருமைப்பாட்டு நெறியா? காந்தியடிகள் கருத்துப்படி நாகரி - உருது லிபி களை மத்திய அரசாங்கம் ஏற்றிருந்தால், இந்தியாவிலுள்ள சுமார் 5 கோடி முஸ்லிம்களின் நல்லெண்ணத்தைப் பெற்றிருக்கலாம், தவறிவிட்டது. இரு லிபிகளில், எது? இந்தி பக்தர்கள் நிலை இதுவாக இருக்க, ஆங்கில பக்தர்களோ, "ஆங்கில மொழியை இந்தியாவின் பொது மொழியாக தேசிய மொழியாக ஏற்க வேண்டும். மத்தியில் என்றென்றும் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுவதோடன்றி, ஆங்கில மொழிக் குரிய ரோமன் லிபியையும் இந்தியாவின் பொது லிபியாகச் செய்ய வேண்டும் என்கின்றனர். ஆங்கில ஆதிக்க எதிர்ப்பைக் கொள்கையளவில் ஆதரிப்பவர்களிலேயும் சிலர், பொது லிபிப் பிரச்சனையில் ரோமன் லிபியை ஏற்கின்றனர். இவர்களிலே, காந்தியவாதிகளாக விளம் பரம் பெற்றோரும் உண்டு. -பொது லிபிப் பிரச்சனையில் நாகரி லிபிபற்றிக் காந்தியடிகளின் கருத்தை மேலே எடுத்துக் காட்டி