பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

லுக்கு அஞ்சுவார்? மாபெரும் அரசியல் மேதையான ஸ்மட்சு துரையே அடிகளின் அஹிம்சைப் போரில் திக்குமுக்காடிப் போனர். கேவலம் மாவட்டத் தலைவருக்கா அடிகள் அஞ்சுவார். அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கும் போது, உமியும் தவிடும் காங்தியடிகளே என்ன செய்ய முடியும்?

‘உங்கள் ஆணையை கான் பெற்றுக்கொண்டேன். ஆனல் நான் தொடங்கியுள்ள வேலே முடியும் வரையில் சம்பரான விட்டு கான் வெளியில் செல்லுவது இயலாது” என்று ஒரு தாளில் எழுதிக் கொடுத்தனுப்பினர் அடிகள். அக்காலத்தில் கலெக்டர் என்றால், ஆண்டவனின் அவதாரம். அதுவும் வெள்ளேத்தோல் கலெக்டர்! கலெக்டரின் ஆணையை ஒருவன் அவமதிப்பதென்றால். ஆங்கில அடிவருடிகளின் தீர்ப்புப்படி, அவனுக்கு ரெளா வாதி கரகம்'தான். காங்தியடிகளின் பதில் இந்திய காட்டையே ஒரு கலக்குக் கலக்கி விட்டது. ஏன்? பெரு வியப்பிலாழ்த்தி விட்டது எனலாம். யாரோ காந்தியாமே! அவர் வெள்ளேக்காரக் கலெக்டரின் ஆணயையே மீறி விட்டாராமே! அஞ்சா கெஞ்சாப்பா அவர்’ என்றெல்லாம் மூக்கில் விரல் வைத்துப் பேசினர் இந்திய மக்கள்.

சம்பரான் போராட்டத்தின் போது மற்றாெரு குறிப் பிடத்தக்க நிகழ்ச்சி நடந்தது. சம்பரானிலிருந்த வெள்ளைக் காரத் தோட்ட முதலாளி ஒருவர், “காந்தியைக் கொல் வதற்கென்றே, அரசாங்கத்திடமிருந்து நான் துப்பாக்கி லேசென்ஸ் வாங்கியிருக்கிறேன். காந்தி என் எதிரில் வங்தால் சுட்டுப் பொசுக்கி விடுவேன்’ என்று எல்லாரிட மும் சொல்லிக் கொண்டிருந்தார். இச் செய்தி காங்தியடி களின் காதுக்கு எட்டியது. ஒரு நாள் மாலே காங்தியடிகள் தனியாக அங்கத் தோட்ட முதலாளியின் இல்லத்திற்குச் சென்றார்,