பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஒரு நாள் கஸ்தூரிபாய் தம்முடைய வேலைகளே யெல்லாம் முடித்துவிட்டுத் தம் அறையில் சென்று உறங்கி விட்டார். திடீரென்று விருந்தாளிகள் வந்துவிட்டனர். அதுவும் குறிப்பிடத்தக்கவர்கள். பண்டித மோதிலால் நேருவும் அவர்களில் ஒருவர். அடிகளுக்குக் கையும் ஒட வில்லை; காலும் ஒடவில்லை. சமையலறைக்குச் சென்றார். அன்னேக்குத் துணேபுரியும் இளைஞன் சமையலறையைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தான். அவனே மெதுவாக அழைத்தார். வாயில் விரலேவைத்துச் சத்தம் செய்யாமல் இருக்குமாறு அச்சிறுவனுக்குச் சைகை காட்டினர். சீக்கிரம் சமையல் ஆகவேண்டுமென்று மெதுவாக அவன் காதில் சொன்னர். “கஸ்தூரிபாயின் உறக்கத்தைக் கலைக்கக் கூடாது; அவள் விழித்துக் கொள்ளாத முறையில் ஓசை யின்றிச் சமையல் கடக்கவேண்டும்’ என்று எச்சரித்தார். தாமே அச்சிறுவனுக்கு அருகிலிருந்து ஒத்தாசை செய்தார் காய்கறி குறுக்கினர்; மாப்பிணைந்தார்.

அச்சிறுவன் கைதவறுதலாக ஒரு பாத்திரத்தைத் தவற விட்டுவிட்டான். அதன் ஒசை உறங்கிய கஸ்துரரிபாயை விழித்தெழுமாறு செய்தது. பூனேதான் சாமானே உருட்டு கிறது என்று எண்ணிய அன்னேயார் அறையிலிருந்து வெளி யில் வங்தார். சமையல் வேலே விருவிருப்பாக கடந்து கொண் டிருந்தது. அடிகள் அரிவாள் மணையில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தார். அன்னயாருக்கு கிலேமை புரிந்து விட்டது.

“ஏன்? என்னைத் துணைக்கு அழைக்கக் கூடாதா? நான் இக்காரியத்தைச் செய்யமாட்டேன?’ என்று கடிந்து கொண்டார்.

“கஸ் தாரிபாப்! உனக்குத் தெரியாதா? இது மாதிரி சங்தர்ப்பங்களில் உன்னைக் கண்டு கான் மிகவும் அஞ்சு கிறேன்!” என்று காந்தியடிகள் கூறினர்.

. ?