பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

காட்டுக்கு விடுதலே கிட்டுவது அரிது. நம் உடன் பிறந்தாரை ஒடுக்கிய பாவம் கம்பாலுண்டு அவர்களே காம் பூமியில் ஊர்ந்து போகுமாறு செய்கிருேம். வண்டிகளில் ஏற வொண்ணுதவாறு தள்ளுகிருேம். இவைகளேவிட ஆங்கில ஆட்சி நமக்கென்ன கொடுமை செய்துவிட்டது? கம்பா லுள்ள கொடுமைகளை நாம் களைதல் வேண்டும். எளிய மக்களுக்கு ஆதரவு கல்காத வரை, காட்டு விடுதலை பற்றிப் பேசுவது வீண். எளிய சகோதரர்களே ஒடுக்கும் பாவத்தில் மூழ்கியிருக்குமட்டும் நாம் விலங்குகளேவிட நல்லவர் &T) .

நான் வீடுபேறு எய்த விழைகிறேன். மீண்டும் உலகில் பிறக்க விரும்பவில்லை. பிறக்க நேரின், நான் திண்டாத வகைப் பிறந்து, அவர்கள் துயரங்களேயும், துன்பங்களே யும் அநுபவிப்பதில் பங்காளியாய், என்னேயும் அவர்களே யும் இரங்கத்தக்க கிலையினின்றுங் கரையேற்ற முயன்று உழைத்தல் வேண்டும். ஆதலால், மீண்டும் பிறப்புண்டேல் நான் பஞ்சமகைப் பிறக்க வேண்டுமென்பது இறைவனுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்.

திண்டாமை சமயத்தின் விளைவன்று; சாத்தானின் சூழ்ச்சியால் விளங்தது. தங்கள் அரசியல் உரிமைப் பேற்றிற்குத் தாழ்ந்த வகுப்பாரைக் கொள்ளேயிடும் இந்து சகோதரர்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன். திண்டா மையை ஒழிப்பது, சாதி இந்துக்கள் இந்து சமயத்துக்கும் தங்கட்கும் செய்ய வேண்டிய தலையாய கடமையாகும். அத்துாய கடமை நிறைவேறவேண்டிய இடம் சாதி இக்துக் கள் சமூகமாகும்; அது தீண்டாத மக்கள் சமூகத்திலில்லை. ஒரு சொட்டு நஞ்சு ஒரு கலப்பாலுக்குக் கேடு சூழ்வது போலத் தீண்டாமை இந்து சமயத்துக்கு கேடு குழ்கிறது.’

மேற்கூறிய அரிய பொன் மொழிகள் யாவும், தீண்டாமை பற்றி அடிகள் உதிர்த்த பருமுத்துக்கள்.