பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 08

தீண்டாமை வெறுப்பு, அடிகள் அரசியல் வாழ்வில் குதித்த பிறகு திடீரென்று ஏற்பட்ட “ஞாைேதயமல்ல. இது அடிகளின் வாழ்வில் இளமையிலேயே முகிழ்த்த இயல்பூக்கம். சமுதாயத்தில் ஒருவன் உயர்ந்தவகைக் கருதப்படுகிருன்; மற்றாெருவன் பஞ்சமகை, தீண்டப் படாத எச்சிற் புழுவாக, சேரியிலே ஒதுக்கப்பட்ட பாமரனுக வாழ்கிருன். ஏன்? ஆண்டவன் தான் உலக மக்களைப் படைத்தான். அவன் படைப்பில் உயர்வு தாழ்வு, வேறுபாடு இருக்கலாமா? ஆண்டவன் மக்கள் தாமே எல்லோரும்? அப்படியிருக்க, ஒரு மகன் உயர்ந்தவனென் றும், மற்றாெரு மகன் தாழ்ந்தவன் என்றும் இருப்பது எப்படி இயலும்?’ என்றெல்லாம் அவருடைய பிஞ்சுள்ளம் எண்ணிக் குழம்பியது.

அவர் வீட்டில் மலங்கழுவிய யுகன் என்னும் தோட்டி யைத் தொட்டால் திட்டு என்று அவருடைய அன்னேயார் கூறிய போதெல்லாம் அவருடைய உள்ளம் வருந்தியது. யாரும் பார்க்காத நேரத்தில் அடிகள் யுகனைத் தொட்டுப் பார்த்தார். எங்தவித வேறுபாடும் அவருக்குத் தெரியக் கானேம். யுகனைத் தீண்டிப் பார்த்ததில் அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சி, ஏதோ ஒரு செயற்கரிய செயலைச் செய்து விட்டது போன்ற உள்ள கிறைவு. இங் நிகழ்ச்சி யைச் சத்திய சோதனையில் பின்வருமாறு குறிப்பிடு கிறார் :- -

“திண்டாமை பாவம் என்ற எண்ணம் எனக்குப் பன்னிரண்டாவது வயதிலேயே ஏற்பட்டது. எமது வீட்டு மலங்கழுவும் தோட்டி யுகன் என்பவனேத் தொடுவது எப் படித் திட்டாகும் என்று என் அன்னேயாரைக் கேட்பது வழக்கம்.”

காங்தியடிகள் தென்னப்பிரிக்காவில் டர்பன் நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது குறிப் பிடத்தக்க நிகழ்ச்சி ஒன்று கடந்தது. கஸ்தூரிபாய்