பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0

பணிபுரியும் இவ்வெழுத்தாளர்களேயெல்லாம் தம் குடும் பத்தவராகவே கருதி வந்தார். அவர்கள் எல்லோரும் அடி களின் வீட்டிலேயே தங்கி வாழ்ந்து வங்தனர். காங்தியடி களின் வீடு மேகாட்டு முறையில் கட்டப்பட்டது. அழுக்கு ர்ே வெளிச் செல்வதற்குரிய சாக்கடை அவ்வீட்டு அறை களில் அமைக்கப்படவில்லை; சாக்கடை வைத்தல் கூடாது தான். மேலேகாட்டு வீடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் அழுக்கு நீர்ப்பாண்ட மொன்று வைத்துக் கொள்வார்கள். அடிக்கடி அதைத் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள். காங்தியடிகள் வீட்டிவிருந்த எழுத்தாளர்கள் தங்களுடைய பாண்டங்களேத் தாங்களாகவே துய்மைப்படுத்திக் கொள் வார்கள். அடிகள், வீட்டில் வேலைக்காரன் வைத்துக் கொள்வதில்லை. தம் கையே தமக்கு உதவி என்ற கொள் கையில் அடிகள் உறுதி கொண்டார்.

அடிகளின் வீட்டி ற்குப் புதிதாக ஒரு எழுத்தாளர் வங்தார். அவர் கிருத்தவர். அவருடைய காய்தங்தையர் தீண்டத் தகாதவர்கள். வந்த புதிதாகையால், அங் நண்பர் தம்முடைய அறையையும் அழுக்குப் பாண்டங்களேயும் து.ாய்மை செய்து கொள்ளவில்லை. அவருடைய அறையைத் துய்மைப்படுத்தும் பொறுப்பை காங்தியடிகளே மேற் கொண்டார். அவ்வழுக்குப் பாண்டத்தைத் துய்மைப் படுத்தும்படி கஸ்தூரிபாய்க்குக் காந்தியடிகள் கூறிய பொழுது, அவ்வம்மையார் மறுத்துவிட்டார். அப்பாண்டத் தைத் தீண்டவும் அவர் மனம் ஒப்பவில்லை; அடிகள் அப் பாண்டத்தைத் தொடுவதையும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லே. அடிகள் மேலும் மேலும் வற்புறுத் தவே அவ்வம்மையார் வேண்டா வெறுப்போடும், அடக்க முடியாத ஆத்திரத்தோடும் கண்களில் நீர் தாரை தாரை யாக வழிய சினப் பார்வையாலேயே காங்தியடிகளேக் கடிங் தவராய் கையில் அழுக்குப் பாண்டத்துடன் ஏணியின் வழியே இறங்கி வந்தார். அடிகள் இங்கிகழ்ச்சியைப் பற்றி,