பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 12

வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை யென்றாலும் உள்ளுக்குள் மிகவும் வெட்கப்பட்டேன். கதவைச் சாத்தி னேன். என் மனைவி என்னேவிட்டுப் போவதற்கில்லே யென்றால், நானும் அவளே விட்டுப் பிரிய முடியாது. காங்கள் எத்தனையோ சண்டை போட்டிருக்கிருேமாயினும் இறுதியில் சமாதானம் அடைந்து விடுவோம். அளவற்ற பொறுமையுடையவளாதலால், என் மனேவியே வெற்றி யடைவாள்.

இன்று காய்தல் உவத்தல் இன்றி மேற்படி கிகழ்ச் சியை கான் கூறக் கூடியவகை இருக்கிறேன். இப்புனித கிகழ்ச்சியை நான் கூறியதிலிருந்து தற்போது நானும் என் மனைவியும் தம்பதிகளுக்கு இலக்கியமாக இருப்பதாக முடிவு செய்துவிட வேண்டாம். எங்களுக்குள் முழுக் கொள்கை ஒற்றுமை இப்போதும் இல்லை. திருமதி கஸ்தூரிபாய்க்குத் தனியே ஏதேனும் கொள்கைகள் உண்டாவென்று, ஒருகால் அவருக்கே தெரியாமலிருக்கலாம்.

ஆனல் கஸ்தூரிபாயிடம் ஒரு அருங்குணம் இருக் கிறது. இந்து மனேவியர் பெரும்பாலோரிடம் இப்பண்பு உண்டு என்று சொல்லலாம். அது யாதெனில் விருப்பத் துடனே விருப்பமின்றியோ அறிந்தோ, அறியாமலோ என் அடிச் சுவட்டைப் பின்பற்றி கடப்பதால் அவள் மேன்மை யுறலாம் என்று கருதி வந்திருக்கிருள். ஆதலின் எங்க ளுடைய கருத்துக்களில் வேற்றுமை யிருந்தபோதிலும், எங்களுடைய வாழ்க்கை எப்போதும் கிறைவும், மகிழ்ச்சி யும், வளர்ச்சியும் உடையதாய் இருந்து வந்திருக்கிறது.”



இங்கிகழ்ச்சியின் பின்னர் தென்னப்பிரிக்காவில் இருக்கும்வரையில் கஸ்தூரிபாய் தீண்டாமையைப் பொருட் படுத்தவில்லை. ஆனல் இந்திய காட்டிற்கு வந்த பிறகு, ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களோடு வாழ நேரிட்ட பொழுது அன்னேயார் தம் எதிர்ப்பைத் தெரிவித்தார்.