பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 13

“கஸ்துசரிபாய்! தென்னப்பிரிக்காவில் இரு க் கு ம் வரையில் தீண்டாமையைப்பற்றிப் பொருட்படுத்தாத நீ இங்கு வங்து பிடிவாதம் பிடிப்பானேன்?’ என்று காங்தி யடிகள் கேட்டார்.

‘தென்னுப்பிரிக்கா தொலை நாடு. அங்கு நம் உறவினர் களும், சமூகத்தாரும் கிடையாது. இங்கு, நம் நாட்டிலே, கம்முடைய சமுதாயத்தாரிடையே என் ஆசாரத்தைக் கை விட முடியாது” என்று அன்னையார் விடை யிறுத்தார். காங்தியடிகள்தான் பிடிவாதக்காரராயிற்றே. எப்படியோ கஸ்தூரிபாயைச் சமாதானப்படுத்தி வெற்றி கண்டு விட்டார்.

தென்னப்பிரிக்காவில் கறுப்புச்சட்டத்தை எதிர்த்துப் பெரும் போராட்டம் நடத்தினர் என்பதை நாம் அறிவோம். அப் போராட்டத்தில் எண்ணற்ற இந்திய மக்கள் கலந்து கொண்டனர். அளப்பரிய இன்னல்களுக்கு ஆட்பட்டனர். சத்தியாக்கிரக வேள்வியில் பெண்டிரும் கலந்து கொண்ட னர்; சிறையில் வாடினர்; பசியால் கைங்தனர்; பலர் உயிரை யும் விட்டனர். அவ்வாறு உயிரை விட்ட இந்திய வீரர் களில் தமிழச்சியான வள்ளியம்மை குறிப்பிடத் தக்கவள். இருபது வயதுகூட நிரம்பாத அவ்வேந்திழையின் வீரத் தைப் பலபடத் தம் சுயசரிதையில் பாராட்டிப் பேசுகிருச் காங்தியடிகள்.

அப்போராட்டத்தின்போது பல இந்தியர்கள் காடு கடத்தப்பட்டனர். வெள்ளே அரசாங்கம் அவர்களேக் கப்பலில் ஏற்றி, இந்திய நாட்டுக் கரையில் கொண்டுவங்து இறக்கியது. அவர்களுக்குத் தென்னுப்பிரிக்காவில், வீடு, நிலம், சொத்து யாவும் இருந்தன. அவற்றை யெல்லாம் பறிகொடுத்தனர். அன்பு மனைவியையும், ஆசைக் குழந்தை களேயும் பிரிந்தனர். அநாதைகளைப் போல் இந்திய