பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



என்று கடுமையாகவே பதிலிறுத்தார். எப்படியோ, அரி சனக் குடும்பம் ஆசிரமத்தில் குடியேறியது.

அக் குடும்பம் மூன்றுபேர் அடங்கியது. அக்குடும்பத் தலைவர் திரு துதாபாய். அவருடைய மனேவியின் பெயர் தனிபென். அவர்களுக்கு இலக்குமி என்ற பெண் குழந்தை யும் இருந்தது. துதாபாய் பம்பாயில் ஒரு துவக்கப்பள்ளி யில் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஆசிரம விதிகளே யெல்லாம் கன்கு தெரிந்து கொண்டு, அவைகளைக் கடைப் பிடித்து கடப்பதாக வாக்குறுதி யளித்தார்.

இச் செய்தி ஆமதாபாத் செல்வர்களின் காதுகளுக்கு எட்டியது. உடனே பொருளுதவி செய்வதை கிறுத்திக் கொண்டனர். வேறு பல தொல்லைகளும் ஆசிரமத்திற்கு ஏற்பட்டது. முதலில் தண்ணிர்பற்றிய தகராறு. ஆசிரமத் திற்குத் தண்ணிர் எடுக்கப் பயன்பட்ட கிணற்றில், அப் பங்களாவின் உரிமையாளரும் தண்ணிர் எடுத்து வந்தார். அது பொதுவான கிணறு. ஏற்றம் இறைத்து வந்த அப்பங்களாவின் வேலைக்காரன் ஆசிரமத் தொட்டியி லிருந்து நீர் சிந்துவதால் தனக்குத் தீட்டு ஏற்பட்டு விடு மென்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தான், அதோடு ஆசிரம வாசிகளேத் திட்டவும், துதாபாயைத் தொக்தரவு செய்ய வும் தலைப்பட்டான். அவனுடைய சுடு சொற்களைப் பொறுமையோடு ஏற்றுக் கொண்டு நீர் இறைத்து வரும் படி எல்லோருக்கும் காந்தியடிகள் கூறினர். ஆசிரம வாசி கள் திருப்பித் திட்டாததை அங்த மனிதன் கண்டபோது, வெட்கமடைந்து அதன் பிறகு தொல்லே கொடுப்பதை கிறுத்தி விட்டான்.

இதற்குள் வேறு ஒரு வதந்தியும் காங்தியடிகளின் செவிக்கு எட்டியது. ஆமதாபாத்திலிருந்த சாதி இங்துக் கள் காந்தியடிகளேயும் அவருடைய கண்பர்களேயும் சாதியைவிட்டு விலக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக்