பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 I 7

கேள்விப்பட்டார். காங்தியடிகள் தென்னுப்பிரிக்காவி லிருந்து இந்தியா திரும்பிய பொழுதே காந்தியடிகளேத் தம் சாதியிலிருந்து விலக்க மோட பணியாக்கள் முடிவு செய் திருந்தனர். அதற்காகக் கூட்டம் கூட்டி ஆராய்ந்தனர். இச்செய்தி காந்தியடிகளுக்குத் தெரிந்த பொழுது, “என்னே சாதியிலிருந்து விலக்க இவர்கள் ஏன் இத்தனை தொல்லை எடுத்துக்கொள்ள வேண்டும்?நானேசாதியை விட்டு விலகிக் கொள்கிறேன்” என்று கூறினர். பிறகு சிலருடைய எதிர்ப் பின் காரணமாக மோட பணியாக்களின் முயற்சி கைவிடப் பட்டது.

அரிசனக் குடும்பம் ஆசிரமத்தில் குடிப் புகுந்ததும் இம்முயற்சி மீண்டும் தலைதுாக்கியது. காங்தியடிகள் இதற் காகச் சிறிதும் அஞ்சவில்லை. ‘சாதி இந்துக்கள் எங்களைச் சாதியைவிட்டு விலக்கினல், காங்கள் எல்லோரும் சேரியி லேயே குடியேறி உடல் உழைப்பில்ை வாழ முடிவு செய் திருக்கிருேம்’ என்று கூறினர். ஆமதாபாத்து முதலாளி களின் பொருளுதவி தடைப்பட்டவுடன் ஆசிரமம் பொருள் கெருக்கடியில் மூழ்கியது. என்ன செய்வதென்று தெரியா மல் அடிகள் கலங்கினர்.

ஒருநாள் காலே ஆசிரமக் குழந்தையொன்று காங்தி படிகளிடம் ஒடி வங்து, ‘பாபு யாரோ ஒரு சேட் தங்களைக் காண்பதற்காகக் காரில் வந்து கம் ஆசிரம வாயிலில் காத்து கொண்டிருக்கிறார்’ என்று கூறியது. காங்தியடிகள் வெளி யில் சென்று பார்த்தார். யாரோ ஒரு ஆமதாபாத் செல்வர்! காரிலிருந்தபடியே, “காந்திஜி! தங்கள் ஆசிரமத்திற்கு நான் சிறிது பொருளுதவி செய்ய விரும்புகிறேன். ஏற்றுக் கொள் வீரா?’ என்று கேட்டார்.

‘கரும்பு தின் னக் கூலியா! தாராளமாகக் கொடுங்கள்! காங்களும் இப்போது பண முடையில்ை தான் அவதிப்படு கிருேம்’ என்று கூறினர் அடிகள்.