பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 I

திர்ை. ‘அரிசனங்களேச் சமுதாயத்தில்தான் பிரித்து வைத்திருக்கிருேமென்றால் அரசியலிலுமா பிரித்து வைக்க வேண்டும்” என்று கூறினர். அச்சட்டத்தை எதிர்த்து உண்ணுவிரதமும் மேற்கொண்டார். அரிசன முன்னேற் றத்திற்காகக் கோடிக் கணக்கில் பொருள் திரட்டி, அவர்கள் முன்னேற்றத் திட்டங்களுக்குச் செலவிட்டார். சில ஆண்டுகள் அரசியலிலிருந்து விலகி, அரிசனத் தொன் டிலும், கதர்த் தொண்டிலுமே தம் முழு கேரத்தையும் செலவிட்டார்.


வெளிநாட்டுத் துணிகளைத் தி யாகம் செய்யத் துணிந்து, காந்தியடிகளைத் திருநெல்வேலியில் வந்து பார்த் தவர்களில் ஒருவர் திருவாங்கூர் காட்டைச் சேர்ந்தவர். அவர் சென்னை மாகிலத்தில் தீண்டா வகுப்பார் அநுபவிக் கும் இன்னல்களேப்பற்றி மகாத்மாவிடம் எடுத்துச் சொன்னர் திண்டாதார் இந்துக்களாயிருந்த போதிலும், அவர்கள் இங்து ஆலயங்களில் அஅநுமதிக்கப்படுவதில்லை என்ற அதிேயைப்பற்றி உருக்கமாகக் கூறினர். இந்த அதிேயைப்பற்றி போக்குவதற்காகத் திருவாங்கூரில் சில சீர்திருத்தவாதிகள் ஆலயப்பிரவேச இயக்கம் தொடங்கு விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

“என்னமாதிரி இயக்கம் துவங்கப் போகிறீர்கள்?” என்று காந்தியடிகள் கேட்டார்.

“முக்கியமான கோவில் ஒன்றில் உற்சவம் கடக்கப் போகிறது. அச்சமயம் ஒரு பெரிய திண்டாதார் கும்பலே அழைத்துக்கொண்டு கோயிலுக்குள் நுழைவோம். அதை அரசாங்க அதிகாரிகளும் மற்ற இந்துக்களும் தடுத்தாலும் காங்கள் பின்வாங்கப் போவதில்லை. எதிர்த்து உள் நுழைந்தே தீருவோம்’ என்றார் வந்தவர்.

ம. 8