பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 24

காரன் அவர் வீட்டிற்கு வங்கான். அவன் தொழு கோயாளன் (குஷ்டரோகி). நோய்களில் கொடியது தொழுநோய். ஈயருந்த அழுதசை எறும்பு மொய்க்க இற்றாெழுகு புன்னிர்! அருகில் சென்றால் அருவருக்கும் தீநாற்றம்! அவன் ஒப்பந்தக் கூலியாகத் தென்னுப்பிரிக்கா வுக்கு வந்தவன். இப்பாழும் கோய் அவனேப் பற்றிக் கொண்டது. அதனுல் வேலையும் போயிற்று. வயிற்றை நிரப்பப் பிச்சைக்காரன்ை. ஒருவேளை அவனுக்குப் பிச்சை போட்டு விட்டால் அவன் துன்பம் தீர்ந்து விடுமா? என்று காங்தியடிகள் எண்ணினர். அவனைத் தம் வீட்டி லேயே வைத்துக் கொண்டார். உணவிட்டார்; அவன் புண்களை நாள்தோறும் கழுவி மருந்திட்டுக் கட்டினர். புண்களெல்லாம் சிறிது ஆறின. ஒரு தொழு நோயாளனே எவ்வளவு நாள் வீட்டில் வைத்துக் கொண்டிருக்க முடியும்? அங்கோய் பிறரையும் பற்றிக்கொண்டால் என்ன செய்வது என்று வீட்டிலிருந்தவர்கள் அஞ்சினர். அதனல் காங்கி யடிகள் இந்தியத் தோட்டக் கூலிகளுக்கென்று அமைக்கப் பட்டிருந்த ஒரு மருத்துவ மனேயில் கொண்டுபோய் அங் நோயாளியைச் சேர்த்து விட்டார்.

இதே போன்ற ஒரு நிகழ்ச்சி இந்தியாவிலும் கடந்தது. 1939-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்; மாலை நேரம் காங்தி யடிகள் வழக்கம்போல் உலாவுவதற்காக வெளி யி ல் கிளம்பிக் கொண்டிருந்தார். அவரோடு ஐந்தாறு கண்பர் களும் ஆசிரமத்தை விட்டு வெளிக்கிளம்பிக் கொண்டிருங் தனர். காந்தியடிகள் ஆசிரம வாயிலேக் கடந்தவுடன், ஒருவர் ஆசிரமத்தை நோக்கி வங்தார். அவர் தம்முடன் கொண்டுவந்த ஒரு துணி மூட்டையை நிலத்தில் வைத்து விட்டு மரியாதையோடு அடிகளே வணங்கினர். காங்தியடி களும் பதிலுக்கு வணங்கினர்.

“உங்களுடைய கடிதம் எனக்குக் கிடைத்தது. ஆனல் என்னுடைய பதிலேப் பார்த்துக் கொண்டு நீங்கள் வருவீர்