பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 26

அடிகளின் உள்ள நிலையை உணர்ந்த பார்ச்சூர் சாஸ்திரி, ‘உங்களுடைய தரிசனம் எனக்குக் கிடைத்தது. அதோடு நான் மன நிறைவு கொள்கிறேன். இம் மூட்டை யில் என் கையாலேயே நூற்கப்பட்ட கதர்நூல் உள்ளது. உங்களை நேரில் கண்டு கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன். என் ஆசை நிறைவேறி விட்டது. இன்று இரவு இம்மரத்தடியில் தங்கியிருக்க எனக்கு அநுமதி கொடுங்கள். நாளே காலே நான் அரித்துவாரம் சென்று விடுகிறேன்!” என்று கூறினர்.

அடிகள் சா ஸ் தி ரி யை ப் பார்த்து, “உணவு உண்டீரா?” என்று கேட்டார். அவர் அன்று உணவு எதுவும் உண்ணவில்லை என்று அறிந்ததும், கனுகாக்தியை அழைத்து, சாஸ்திரிக்கு உணவு கொடுக்குமாறு சொன் ர்ை. கனுகாங்தி சாஸ்திரியை அழைத்துச் சென்று உணவிட்டார்.

காந்தியடிகள் உலாவுவதற்குப் புறப்பட்டார். நாள் முழுதும் இடையரு உழைப்பிலுைம், கடின சிந்தனே யாலும் ஏற்பட்ட களேப்பை நீக்கிக்கொண்டு புத்துணர்ச்சி பெறுவதற்காக அடிகள் உலாவச் செல்வது வழக்கம். அப்போது குழந்தைகளுடனும், சிறுவர்களுடனும் சிரித்துப் பேசிக் கொண்டு செல்வார். கண்பர்களுடன் அதிக முக்கிய மில்லாத சிறு விஷயங்களைப் பற்றி நகைச்சுவையோடு பேசிக்கொண்டு செல்வார். ஆ ைல் அன்று அடிகள் உள்ளம் பெரும் சிக்தனையில் மூழ்கியிருந்தது. அவர் உளப் போராட்டத்தை முகம் தெற்றெனக் காட்டியது. யாரிட மும் உரையாடாமல், சிரித்து மகிழாமல் நடந்து கொண் டிருந்தார். ஆசிரமத்திற்குத் திரும்பியவுடன் தொழுகைக் கூட்டத்துக்குச் சென்றார். தொழுகை முடிந்ததும், உறங்கச் சென்று விட்டார்.

உடல் ஒய்வு பெற்றது. மூளையும் கூட ஒரளவு ஒய்வு பெற்றதென்று சொல்லலாம். ஆனல் அவருடைய உள்ளம்