பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 28

நோயாளன் வடிவில் அச்சோதனை காந்தியடிகளை நெருங் கியது.

உடனே, காங்தியடிகளின் குடிசைக்குப் பக்கத்தில் பார்ச்சூர் சாஸ்திரிக்கும் ஒரு குடிசை போடப்பட்டது. நோயாளியின் மீது சூரிய ஒளி நல்ல முறையில் படவேண்டு மென்பதற்காகக் கதர்த் துணியே கூரையாக வேயப் பட்டது. அன்றிலிருந்து பார்ச்சூர் சாஸ்திரியைப் போல் வேறு எந்த ஆசிரமவாசியும் காந்தியடிகளின் கவனத்தைக் கவரவில்லை. அப்போது இந்திய அரசியல் வானில் துன்ப மேகங்கள் குழத்தொடங்கின. இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயருக்கு ஒத்துழைப்பு நல்க முடியாதென்று காந்தியடிகள் கூறி விட்டார். சட்டசபைகளிலும், பாராளு மன்றத்திலும் அமைச்சர் இருக்கையில் வீற்றிருந்த அரசியல் வாதிகள் எல்லோரும் சிறைக்கூடத்தைத் தழுவத் தயாராக இருந்தனர். சட்ட மறுப்பை எங்த வடிவில் துவக்குவது என்பது பற்றிய சொற்போர் அரசியல் தலைவர்களி னிடையே காரசாரமாக இருந்தது. அமைச்சர் பதவியை உதறித்தள்ளிவிட்டுத் தியாகத் தீயில் தங்களேப் பொசுக்கிக் கொள்ள இந்திய அரியேறுகள் துடித்துக் கொண்டிருந்தன. இத்தகைய கொந்தளிப்புகளினிடையே, பார்ச்சூர் சாஸ்திரி யின் உடலில் தொழுநோயால் ஏற்பட்டிருந்த புண்களே எப்படி ஆறவைப்பது என்ற சிந்தனையில் மகாத்மாவின் உள்ளம் மூழ்கியிருந்தது.

காள்தோறும் பார்ச்சூர் சாஸ்திரியின் புண்களைத் தம் கையாலேயே கழுவி மருந்திட்டுக் கட்டினர். சிலகாட் களுக்குப் பின் ஒரு சில ஆசிரமவாசிகள் அப்பணியைத் தாங்கள் மேற்கொண்டனர். சாஸ்திரிக்கு என்ன உணவு கொடுக்க வேண்டுமென்பதை அடிகளே வரையறுத்துக் கூறினர். ஒவ்வொரு நாளும் மூன்று வேளேயும், அடிக ளிடம் காட்டிய பிறகே சாஸ்திரிக்கு உணவை எடுத்துச் செல்ல வேண்டும். காலையில் உலாவிவிட்டுத் திரும்பியதும்,