பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2

இழந்தவர்கள். அவர்கள் புண்ணிய ஆறுகளில் நீராடி, புனிதத்தலங்களே வழிபட விரும்பினர். உடனே சிரவணன் ஒரு காவடி கட்டி, அதன் இருபுறமும் பெற்றாேர்களே ஏற்றிச் சுமந்து ஊர் ஊராகச் சென்றான். அவர்களுக்குப் பரிவோடு பணிவிடை செய்தான். இங்நாடகத்தைக் கண்ட காக்தியடிகளின் உள்ளம் உருகியது. தாமும் சிரவணஇனப் போல் பெற்றாேர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்று உறுதிபூண்டார்.

சத்தியத்திற்காக அரிச்சங்திரன் பட்ட இன்னல்களே அறியாதார் யார்? காடிழந்தான்; நகரிழந்தான்; பெற்ற மனேவியையும் உற்ற மகனேயும் கடனுக்காக விற்றான்; உலகத்தை அடிமை கொண்டு அரியணே ஏறி ஆட்சி புரிந்தவன், கள்ளுண்ணும் புலேயனுக்கு அடிமையானன். ஒரு பொய் கூறியிருந்தால் இத்துன்பங்களே அவன் அனுபவித்திருக்க வேண்டியதில்லே. ஆல்ை சுடுகாட்டில் மகனின் பிணத்தைக் கண்டபோது கூட, சத்தியத்திலிருந்து அவன் உள்ளம் சிறிதுகூட அசைந்து கொடுக்கவில்லை. அரிச்சந்திரனின் வாய்மை அடிகளின் இளமையுள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது.

“அரிச்சக்திரனைப் போல் கானும் என் சத்தியவாகை இருக்கக் கூடாது? நானும் இனிப் பொய் பேசுவதில்லை: எவ்வளவு துன்பம் வந்தாலும் உண்மையே பேசுவேன்’ என்று உறுதி பூண்டார். சத்தியத்தைக் காப்பாற்ற அரிச்சந்திரன் எவ்வளவு துன்பம் அனுபவித்தானே அதை விடப் பதின் மடங்கு துன்பத்தைக் காக்தியடிகள் தம்முடைய வாழ்க்கையில் அனுபவித்தார். அரிச்சந்திரன் சத்தியத்திற்காக உயிரிழக்கவில்லே. ஆனல் அடிகள் உயிரையும் வழங்கினர். இனிச் சத்தியத்திற்கு எடுத்துக் காட்டாத அடிகளின் வாழ்க்கையில் கடந்த ஒரு சில

நிகழ்ச்சிகளைக் காண்போம்.