பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 3 ||

அழைக்கப்பட்டார்கள். முதலில் இவர்கள் கேடாலில் குடி யேறி இருந்தார்கள். கேடால், ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்த பிறகு போயர்களில் பெரும்பாலோர் உள்நாடு நோக்கிச் சென்று கிரான்ஸ்வால் என்னும் தனி நாட்டை ஏற்படுத்திக் கொண்டனர். கொஞ்ச காலம் திரான்ஸ் வால் ஏறக்குறையச் சுதந்திர காடாக இருந்தது. அப்போது குரூகர் என்னும் போயர்ப் பிரமுகர் திரான்ஸ்வால் குடியர சின் தலைவராக விளங்கினர். குடியரசு என்ற பெயர் இருந்தாலும் ஓரளவு ஆங்கிலப் பேரரசுடன் தொடர்பு கொண்டிருந்தது. ஆனல் திரான்ஸ்வால் மீது ஆங்கில ஆதிக்கத்தை உறுதிப்படுத்த வேண்டுமென்று ஆங்கில அர சாங்கம் முயன்றபோது, போயர்கள் அம்முயற்சியை எதிர்த்தார்கள். அதன் விகளவாகவே போயர் போர் மூண்டது. இச்சமயம் காங்தியடிகள் ஒரு சேவைப் படையை ஏற்படுத்தினர். அப்படையில் 1100 இந்தியர்கள் பணி புரிந்தனர். குண்டுகள் பறக்கும் போர்க் களத்தில் அடிபட்ட வீரர்களச் சுமந்து சென் ருர். போர்க்களத் திற்கும் மருத்துவமனைக்கும் இருபது கல் தொலைவு இருக் கும். அவர்களுக்கு முதலுதவி செய்தார். போயர்போரில் காங்தியடிகள் செய்த சேவை பாராட்டற் குரியதாகும்.

காங்தியடிகள் இங்தியா வக்த பிறகுகூட, முதல் உலகப் போரில் ஆங்கில அரசாங்கத்திற்குப் பெருந்துணையாக இருந்தார். ஆங்கிலேயர்களும் அடிகளுக்குக் கெய்சரிஹிந்த்’ பதக்கம் வழங்கினர். இச்செய்கைகளால் பகை வனுக் கருள்வாய்’ என்ற காந்தியடிகளின் பேருண்மை விளங்கும்.


ஒருநாள் காங்தியடிகள் ஒரு மாட்டு வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். பாதி வழி சென்றதும், அம்மாட்டின் கழுத்திலிருந்து குருதி வடிவதைக் கண்டார்.