பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 5

கொள்ள, வீட்டு வேலைக்காரி அரம்பையின் அறிவுரைப்படி, இராம காமத்தைப் பாராயணம் செய்யத் தொடங்கினர். அதன் பிறகு பேய் பிசாசுகளைப் பற்றிய அச்சமும் அவருள்ளத்தைவிட்டு நீங்கியதாம். எனவே அவர் பிற். காலத்தில் மேற்கொண்ட இராம பஜனைக்கு, இளமை யிலேயே வித்துான்றப்பட்டது என்பதை அறியலாம். போர்பங்தரில் வாழ்ந்தபோது, அவருடைய வீட்டில் நாள் தோறும் அவர் தங்தையின் முன்ல்ை, இராமாயணம். படிக்கப்படுவதுண்டாம். இராச கோட்டையில் அடிகள் வாழ்ந்தபோது பாகவதம் படிக்கப்பட்டதாம். இவைகளைக் கேட்டதனால் இராமாயணம். பாகவதம் ஆகிய நூல்களின் பால் இளமையிலேயே தமக்குப் பற்று ஏற்பட்டது என்று காந்தியடிகள் கூறுகிரு.ர்.

காந்தியடிகளின் பெற்றாேர்கள் வைணவர்களாக இருந்தாலும், சிவன் கோவிலுக்கும் வழக்கமாகச் செல் வதுண்டு. சைவ நோன்புகளேயும் அவருடைய தாயார் மேற்கொண்டு ஒழுகுவாராம். சமணப் பெரியர்களும் அடி களின் இல்லத்திற்கு அடிக்கடி வருவார்கள். காந்தியாரின் தங்தையாருக்கு இசுலாமிய நண்பர்களும், பாரசீக நண்பர் களும் பலருண்டு. அவர்களும் வீட்டுக்கு அடிக்கடி வருவார் கள். காங்தியடிகளின் தங்தையாருக்குச் சமயக் கொள்கை களே அறிந்து கொள்வதில் பேரார்வம் உண்டு. ஆகையில்ை வீட்டில் சமயங்களைப் பற்றிய உரையாடல் அடிக்கடி நடை பெறும். நோய்வாய்ப்பட்டிருந்த தம் தங்தைக்குப் பணி விடை செய்து கொண்டே, மோகன தாஸ் மேற்படி உரை யாடல்களைக் கவனமாகக் கேட்பார். இதன் பயனுக “எல்லாச் சமயங்களும் கடவுளுக்கு ஏற்ற சமயங்களே’ என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கு இளமையிலேயே ஏற்பட்டது.

ஆனல் கிருத்தவ சமயத்தின் மேல் மட்டும் அடிகளுக்கு அந்த நாளில் சிறிது வெறுப்பு ஏற்பட்டிருந்தது. இதற்குக்